தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

டி.வி. சீரியல்களால் பெண்களுக்கு ஏற்படும் ஆபத்து

Go down

டி.வி. சீரியல்களால் பெண்களுக்கு ஏற்படும் ஆபத்து Empty டி.வி. சீரியல்களால் பெண்களுக்கு ஏற்படும் ஆபத்து

Post  oviya Mon Jan 21, 2013 4:07 pm

அனைத்து தனியார் டிவிகளும் பெண்களை எவ்வளவுக்கு எவ்வளவு கொச்சைப்படுத்த முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு நான் நீ என போட்டி போட்டு கொண்டு செய்து வருகின்றன. ஏதோ இன்றைய பெண்கள் பணம் சம்பாதிப்பதற்காக தகாத உறவை வைத்துக்கொள்ள தயங்க மாட்டார்கள் என்பது போல் சித்தரிக்கப்படுகின்றன.

சமுதாயத்தில் முன்னேறியுள்ள பெண்கள் இதனை ஒடுக்க எதிர்ப்பு காட்டாமல் இன்னும் ஏன் மௌனமாக இருக்கிறார்கள் என்பது புரியவில்லை. அகவே இப்படிப்பட்ட இழிவான தொடர்களை ஒளிபரப்பும் சேனல்கள் தாங்களாகவே முன் வந்து அதனை குறைத்துக்கொள்ள வேண்டும்.

இது விரைவான உலகம். விரைவாக பணக்காரியாக வேண்டுமென கொள்ளை ஆசை எல்லா பெண்களின் மனதிலும் புகைந்து கொண்டு இருக்கிறது. இப்படி எல்லாம் சென்றால் சீக்கிரமாக அனைத்து வசதிகளோடு சுகபோகமாக வாழலாம் என டிவிகளில் வரும் தொடர்களில் காட்டும் போது அவை அவர்களை தூபம் போடுவது போல் ஆகிவிடுகிறது.

சில பெண்கள் அத்தகைய சந்தர்ப்பம் கிடைக்கும் போது அவர்களின் மனம் மாறிட வாய்ப்பு உள்ளது. ஆணுக்கு சம்பாதிப்பது மட்டுமே வேலை. ஆனால் குடும்பத்தையும், பிள்ளைகளையும் கவனிப்பது பெரும்பாலும் பெண்களின் பொறுப்பாக உள்ளது.

கணவன் குடும்பத்தை சரியாக கவனிக்காமல் போனால் குடும்பம் பெரும் நஷ்டத்தில் அகப்பட்டு சீரழியும் சமயத்தில் சீரியலில் பெண் தகாத தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்றுவது போல வரும் காட்சி தான் அந்த தருணத்தில் அவள் முன் வந்து நிற்கும். அவளும் அதுபோல தடம் மாற முற்படலாம்.

பெரும்பாலும் தொடர்களை பார்ப்பது எல்லாம் வேலைக்கு போகாத வீட்டிலுள்ள பெண்கள்தான். கணவன்,மனைவிக்குள் சின்ன பிரச்சனை வந்தாலும் தொடரில் தற்கொலை செய்து கொள்வது போல வந்தால் அதுபோல் தற்கொலை செய்து கொள்ள முற்படுவாள்.

இல்லையேல் கணவனை பழிவாங்குவது போல் காட்சி வந்தால் அவை மாதிரியே கணவனை கொல்ல முற்படுவாள். சிறுவயதில் பெண்கள் தொடரை காணும் போது அதில் இளம்பெண்கள் பல ஆண்களோடு சோர்ந்து சுற்றுவதுபோல காட்சி வந்தால் தானும் பிற்காலத்தில் வளர்ந்து பெரியவளாகும் போது அவ்வாறு செய்ய வேண்டுமென மனதில் பசுமரத்து ஆணிப்போல் பதித்து விடும்.

இறுதியில் அதுபோல செயல்பட முற்படுவார்கள் சில இளவட்ட இளைஞிகள். சீரியலில் லவ்வுதான் பிரதானமானது என காட்டும்போது வாழ்கைக்கு அவை தான் அவசியமென பிள்ளைகளின் மனதில் தொற்றிக் கொள்கின்றனர். இறுதியில் அவர்கள் வயது வித்தியசமின்றி காதலிக்க ஆரம்பித்துவிடுகின்றனர்.

பெண்கள் தான் குடும்பத்தின் ஆணிவேர். இவர்களிடம் டிவி தொடர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சை விதைத்து கொண்டு இருக்கிறது. இறுதியில் அவள் கெடும் போது குடும்பம், சமுதாயம், நாடு என அனைத்தும் சிதைத்து போய் பாழாய் போக போவது உறுதி. தொடர்களால் பெண்கள் சீரழிவது உண்மை என்பது புலனாகிறது. ஆகவே மத்திய அரசு இவற்றிற்கு விரைவில் கடிவாளம் இட்டால் நல்லது.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum