நயனதாராவை பிரபுதேவா மணந்தால் ‘காப்பு’தான் கிடைக்கும் – வக்கீல்கள்
Page 1 of 1

பிரபுதேவா முறைப்படி திருமணமானவர். அவர் தனது மனைவியை இன்னும் விவாகரத்து செய்யவில்லை. சட்டப்படி ரமலத்தான் பிரபுதேவாவின் மனைவி. மனைவி உயிருடன் இருக்கும் நிலையில், இன்னொரு பெண்ணை மணந்தால் இந்து திருமணச் சட்டப்படி சட்டவிரோதமாகும். அவ்வாறு திருமணம் செய்யும் ஆண்களை கைது செய்ய சட்டத்தில் இடம் உள்ளது என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதாவது நயனதாராவை பிரபுதேவா தற்போதைய நிலையில் (அதாவது மனைவி ரமலத்தை விவாகரத்து செய்யாமல் மணந்தால்) அவருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை கிடைக்குமாம். இருப்பினும் ரமலத் இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்தால்தான் இந்த நடவடிக்கையை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
நயன்தாராவுடனான காதலை பிரபுதேவா பகிரங்கமாக ஒப்புக் கொண்டு விட்டார். மேலும் அவர் பாலைவனச் சோலை, புத்திசாலி, அவரை காதலிக்கிறேன், விரைவில் கல்யாணமும் செய்து கொள்ளப் போகிறேன். இது எனது தனிப்பட்ட விஷயம், இதுகுறித்தெல்லாம் விரிவாக மீடியாக்காரர்களிடம் பேசிக் கொண்டிருக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
பிரபுதேவாவின் மனைவி ரமலத். இவரையும் காதலித்து அதிரடியாகவே மணந்தார் பிரபுதேவா. இந்த நிலையில், நயனதாராவின் வலையில் விழுந்தார். இருவரும் கல்யாணம் செய்து கொள்ளாமலேயே குடித்தனம் நடத்துவதாகவும் செய்திகள் வெளியாகின.
பிரபுதேவாவின் இந்த கள்ளக்காதலால் வெகுண்ட ரமலத், நயனதாராவை எங்காவது பார்த்தால் அடிப்பேன் என்று ஆவேசமாக கூறியிருந்தார். இருப்பினும் இருவரும் அதைப் பொருட்படுத்தவில்லை. வழக்கம் போலவே வளைய வந்து கொண்டுள்ளனர்.
சமீப காலமாக புதிய படங்கள் எதையும் நயனதாரா ஒப்புக் கொள்ளவில்லை. பாஸ் என்கிற பாஸ்கரன் படத்துடன் அவரது திரையுலக வாழ்க்கை முடிவுக்கு வரவுள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது அவரைக் கல்யாணம் செய்யப் போவதாகவும் அறிவித்து விட்டார் பிரபுதேவா. இதனால் பரபரப்பு பற்றிக் கொண்டுள்ளது.
மேலும் பிரபுதேவா, நயனதாரா கல்யாணம் செல்லுமா என்று வக்கீல்கள் கருத்து தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.
முதல் மனைவி ரம்லத்தை விவகாரத்து செய்யாமல் நயன்தாராவை மணந்தால் சட்ட சிக்கல் வரும் என்கின்றனர் வக்கீல்கள். பிரபுதேவாவுக்கு 5 வருடம் வரை சிறைத் தண்டனை கிடைக்குமாம்.
இதுகுறித்து சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் விஜயதரணி கூறுகையில், பிரபுதேவாவுக்கு மனைவி ரம்லத் இருக்கிறார். இரு குழந்தைகளும் உள்ளனர். எனவே நயன்தாராவை மணப்பது சட்டப்படி குற்றம்தான்.
ரம்லத் திருமணம் பதிவு செய்யப்படவில்லை. எனவே அது செல்லாது என பிரபுதேவா கருதலாம். இந்து சட்டப்படி நாலைந்து பேரை வைத்துக் கொண்டு தாலி கட்டினாலே அது செல்லத்தக்கதுதான். பிரபு தேவா-ரம்லத் திருமணத்தை நேரில் பார்த்த சாட்சிகள் உள்ளனர்.
இருவரும் ஒரே வீட்டில் குடித்தனம் நடத்தியதை அக்கம் பக்கத்து வீட்டார் பார்த்து இருக்கிறார்கள். பிரபுதேவா பாஸ்போர்ட்டில் மனைவி ரம்லத் என்ற லதா என உள்ளது. இரு குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்கள் பிறப்பு சான்றிதழிலும் தந்தை பிரபுதேவா என்றுதான் உள்ளது.
ரம்லத் தனது பெயரை லதா என மாற்றி இந்துவாக மாறியது அரசு கெஜட்டில் பதிவாகி உள்ளது. அதில் கணவர் பிரபுதேவா என இருக்கிறது. ரேஷன் கார்டிலும் பெயர்கள் உள்ளன.
இவையெல்லாம் பிரபு தேவா-ரம்லத் கணவன்- மனைவி உறவை சட்டப்பூர்வமானதாக்கப் போதுமான ஆதாரங்கள். எனவே பிரபுதேவா- நயன்தாரா திருமணம் நடந்தால் இருவருக்கும் தண்டனை கிடைப்பது உறுதி.
சமீபத்தில் இந்தியாவில் முதல் மனைவி இருந்தும் அமெரிக்காவில் இன்னொரு பெண்ணை மணந்து ஒருவர் குடித்தனம் நடத்தினார். இந்த விஷயம் தெரிந்ததும் முதல் மனைவி போலீசில் புகார் அளித்தார். அந்த புகார் அடிப்படையில் இரண்டாவது மனைவி அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய போது விமான நிலையத்திலேயே போலீசார் கைது செய்தனர்.
அதன்படி பார்த்தால் நயன்தாராவுக்கும் தண்டனை கிடைக்கும். பிரபுதேவாவுக்கு 5 வருடம் வரை ஜெயில் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது…,” என்றார்.
அதேசமயம், ரமலத்தே முன்வந்து போலீஸில் புகார் கொடுத்தாலோ அல்லது வழக்கு தொடர்ந்தாலோதான் பிரபுதேவா மீது நடவடிக்கை பாய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நயனதாராவை காதலிக்கிறேன், கல்யாணம் செய்யப் போகிறேன் – பிரபுதேவா
» படைப்பு-காப்பு-கலைப்பு
» படைப்பு-காப்பு-கலைப்பு
» மூவருக்குத் தூக்கு: நடிகர், நடிகைகள், வக்கீல்கள், மாணவர்களைத் திரட்டி போராட்டம் – பாரதிராஜா அறிவிப்பு
» 'ஆதிபகவன்' படத்தில் இந்துக்கள் பற்றி அவதூறு: தலைப்பை மாற்ற வேண்டும் என போலீஸ் கமிஷனரிடம் வக்கீல்கள் புகார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum