திருவிளக்கு ஏற்றும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்
Page 1 of 1
திருவிளக்கு ஏற்றும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்
1. திருவிளக்கில் எண்ணெய் விட்டு எத்தனை திரிகளைப் போட்டிருந்தாலும் அத்தனையும் ஏற்றிட வேண்டும். குறைந்த பட்சம் இரண்டு திரிகளாவது ஏற்ற வேண்டும்.
2. நெய் வேத்தியங்கள் நிவேதனம் செய்யும் வாழை இலையின் பக்கத்தில் விளக்கேற்றுவது மிகவும் சிறந்தது.
3. ஊது பத்திகளை பூஜைக்கு வைத்த வாழைப்பழங்களின் மேல் குத்தி ஏற்றுதல் கூடாது. ஊது பத்திகளுக்கென்று உரிய ஸ்டாண்டை பயன்படுத்துதல் நல்லது. இல்லையேல் ஒரு சிறிய பாத்திரத்தில் அரிசியை நிரப்பி அதில் ஊது பத்திகளைக் குத்தலாம்.
4. கற்பூரம் ஏற்றும் போது தட்டில் சிறிதளவு திருநீறை வைத்து அதன் மேல் கற்பூரத்தை ஏற்ற வேண்டும். திருநீறு இல்லையேல் வாழை இலையிலோ வெற்றிலையையோ வைத்து ஏற்றலாம். பூஜைக்குரிய வெற்றிலையை வைத்து கற்பூரம் ஏற்றுதல் தவறு.
5. பூஜை தொடங்கும் முன் வீட்டில் சுமங்கலி குத்துவிளக்கை ஏற்றி விட்டு வணங்கிய பிறகு பூஜை செய்தால் நிச்சயம் பலன் உண்டு.
6. சுபகாரியங்கள் வீட்டில் நடைபெற விளக்கு பூஜை செய்து வழிபட்டால் நற்பலன்களை கண்டிப்பாக பெறலாம்.
7. விளக்கு பூஜை செய்யும் போது குத்துவிளக்கிற்கு முன் சிறிது மஞ்சள் தூளால் சிறு விநாயகரின் சிலையை செய்து குங்குமமிட்டு அவரை அங்கு வீற்றிருக்க செய்ய வேண்டும்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» விரதத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள்
» விரதத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள்
» தீபம் ஏற்றும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்
» மந்திரம் படிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதி முறை
» உணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum