தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அப்பனாவது ; ஆத்தாளாவது… வனிதா விஜயகுமார் ஆவேசம்!

Go down

அப்பனாவது ; ஆத்தாளாவது… வனிதா விஜயகுமார் ஆவேசம்! Empty அப்பனாவது ; ஆத்தாளாவது… வனிதா விஜயகுமார் ஆவேசம்!

Post  ishwarya Tue Apr 23, 2013 12:14 pm

நானும், என் கணவரும் அசிங்கப்பட்டதற்கு பின் விஜயகுமாரை நான் சும்மா விடமாட்டேன். இரண்டு நாள் என் புருஷனை சிறையில் தள்ளிவிட்டனர். இந்த விஷயத்தில் அப்பாவாவது, ஆத்தாளாவது… உண்மை, நியாயம்தான் எனக்கு வேண்டும், என்று வனிதா விஜயகுமார் ஆவேசமாக கூறினார். தான் கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீசார் சமாதான முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட்டிடமும் வனிதா விஜயகுமார் புகார் அளித்தார்.

அதன் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:- புறநகர் கமிஷனர் ஜாங் கிட்டை நேரில் சந்தித்து, விளக்கம் அளித்தேன். என்ன நடந்தது என்பதை நான் கமிஷனரிடம் எடுத்துக் கூறினேன். “நான் செய்ததில் ஏதாவது தவறு இருக்கிறதா, மீடியாவில் பேசக்கூடாதா? என, கமிஷனரிடம் கேட்டேன். அதற்கு அவர், “உங்களுக்கு எல்லாவிதமான உரிமையும் இருக்கிறது. இன்றைக்குத்தான் இந்த வழக்கு என் கையில் வந்திருக்கிறது. கண்டிப்பாக, உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வழக்கை விசாரிக்க துணை கமிஷனர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என, கமிஷனர் என்னிடம் கூறினார். நான் கொடுத்த புகாருக்கு நடவடிக்கை எடுக்காததற்கு பொய் புகார்தான் காரணம் என, என் அப்பா கூறுகிறார். புகாரில் உள்ளது அனைத்தும் உண்மைதான்.

கடந்த 20ம்தேதி என் அப்பா விஜயகுமார் கொடுத்த புகாருக்கு மட்டும் எப்படி உடனடியாக நடவடிக்கை எடுத்தனர் என்றுதான் நான் கேட்கிறேன். என்னுடைய குழந்தையை அழைத்துக்கொண்டு போக எனக்கு யார் அனுமதி தர வேண்டும். என் குழந்தையை காப்பாற்ற என் அப்பா யார்? என் அம்மா யார்? எனக்கு வக்கீல்கூட கிடையாது. எனக்கு ஓரளவிற்கு சட்டம் தெரியும். கமிஷனர் ஜாங்கிட் ரொம்ப நம்பிக்கை கொடுத்திருக்கிறார். என்னுடைய பேச்சில் எந்த தவறும் இல்லை. என்னை பற்றி தவறான வதந்தியை கிளப்பி விட்டிருக்கின்றனர். பைத்தியம்; லூசு என்று கூறுகின்றனர். அவர்கள் கொடுத்த புகாரில் தவறான தகவல் கொடுத்துள்ளனர். குழந்தையிடமிருந்து தாயை ஆண்டவனே வந்தாலும் பிரிக்க முடியாது. அதுதான் உண்மை. அதுதான் சட்டம். இனிமேல் எனக்கு பிரச்னை இருக்காது என, நினைக்கிறேன். இந்த விஷயத்தில் என்னுடைய அப்பாவும் நானும் மோதிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த விஷயத்தில் “மெயின் ஹீரோவான அருண் விஜய்யை நாடு கடத்திவிட்டு, தற்போது நாடகம் ஆடுகின்றனர். அதுதான் உண்மை. அருண்விஜய் திரும்பி வர வேண்டும். சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

சிலர் இது உங்கள் குடும்ப பிரச்னைதானே என்கின்றனர். குடும்பத்தில்தான் கொலையே நடக்கிறது. நானும், என் கணவரும் அசிங்கப்பட்டதற்கு பின் விஜயகுமாøμ நான் சும்மா விடமாட்டேன். இரண்டு நாள் என் புருஷனை சிறையில் தள்ளிவிட்டனர். இந்த விஷயத்தில் அப்பாவாவது, ஆத்தாளாவது? உண்மை, நியாயம்தான் எனக்கு வேண்டும். இந்த விஷயம் குறித்து என்னிடம் சமீபத்தில் பேசிய முக்கிய நபர் ஒருவர், “இந்த விவகாரத்தை அன்றைக்கே நான் எடுத்திருக்க வேண்டும். இன்றைக்கு நீ செய்திருக்கிறாய். நீ சேற்றில் பூத்த தாமரைப்பூ, என்றார். எங்கள் குடும்பத்தில் பெண் எடுத்தவர் என்பதால், அவரின் பெயரை வெளிப்படுத்த விரும்பவில்லை.

இவ்வாறு வனிதா கூறினார்.

அமெரிக்க தூதμகத்தில் விசாரணை : நடிகை வனிதா அமெரிக்க தூதரகத்தில் அளித்த புகாரின் பேரிலும் விசாரணை நடந்து வருகிறது. இதுபற்றி அவர் கூறுகையில், “அமெரிக்க குடியுரிமை பெற்ற எனது குழந்தை குறித்து பேசுவதற்காக அமெரிக்க தூதரகத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. அங்கு நான் சென்றபோது, அனைத்து விஷயங்களையும் அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது, “இந்த வழக்கை உடனே கவனிக்கிறோம். எங்கள் தரப்பிலிருந்து உங்களுக்கு முழு ஒத்துழைப்பு தரப்படும். இப்போதைக்கு நாங்கள் இந்த வழக்கில் தலையிட வாய்ப்பு இருக்காது என்றனர். பின், புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டை தூதரக அதிகாரிகள் போன் மூலம் தொடர்பு கொண்டனர். அப்போது, “சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை உடனே செய்யுங்கள். தினமும் வனிதா விஜயகுமாரிடம் தொடர்பில் இருக்கிறோம் என்றும் கூறினர் என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» வனிதா வழக்கு – விஜயகுமார், மஞ்சுளா, அருண் கைதா?
» விஜயகுமார் ரகசியங்களை புத்தகமாக வெளியிடுவேன்: வனிதா பேட்டி
» விஜயகுமார் வீட்டில் அசிங்கமான, சட்டவிரோத செயல்கள்!- வனிதா அதிரடி
» மதுவுக்கு அடிமையான மஞ்சுளா… விபச்சாரம் பற்றிப் பேச அருகதையில்லாத விஜயகுமார்! – மகள் வனிதா அதிரடி
» என் மகனை தராவிட்டால் தற்கொலை செய்வேன்! – வனிதா ஆவேசம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum