ஆண்களின் பெயரை சுமக்கும் பெண்கள்..
Page 1 of 1
ஆண்களின் பெயரை சுமக்கும் பெண்கள்..
பெண்கள் பழைய காலத்தில் வீட்டைவிட்டு வெளியே வருவதில்லை. அதனால் அவர்கள் தூரத்து உறவினர்களின் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது, அவர்களது பெயரை மட்டும் கூறி அறிமுகம் செய்தால் அடையாளம் தெரியாது. அதனால் இன்னாரது மகள், இன்னாரது மனைவி என்று சொல்ல வேண்டிய நிலை இருந்தது.
அதனால் திருமணத்திற்கு முன்பு பெண், தனது பெயருக்கு பின்னால் தந்தையின் பெயரையும்- திருமணத்திற்கு பின்பு கணவரது பெயரையும் இணைத்துக்கொண்டார்கள். பெண்கள் தனித்துவம் பெறாத அந்த காலகட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட அந்த பெயர் இணைப்பு பழக்கம்- பெண்கள் வளர்ச்சி அடைந்து, மேம்பட்ட நிலையில் இருக்கும் இன்றும் நீடித்துக்கொண்டிருக்கிறது.
பெரும்பாலான பெண்கள் அதை ஏற்றுக்கொள்கிறார்கள். பெண்கள் இன்று தனித்து இயங்கும் சக்தியாக தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்களுடன் இணைக்கப்படும் ஆண்களின் பெயர்கள், பெண்களின் தனித்துவத்திற்கு ஏற்புடையதாக இல்லை என்ற கருத்தும் பெண்கள் மத்தியில் நிலவிவருகிறது. `அந்தக் காலத்தில் அப்படி ஒரு அறிமுகம் தேவைப்பட்டது.
இப்போதும் அது தொடரவேண்டியதில்லையே?' என்று கேள்வி எழுப்புகிறார்கள். வட மாநிலங்களில் `சர்நேம்' என்று சொல்லப்படும் ஜாதியின் பெயர்கள் சேர்க்கப்படுகிறது. இது திருமணத்திற்கு முன்பு ஒன்றாகவும், திருமணத்திற்கு பின்பு இன்னொன்றாகவும் மாறுகிறது. இதனால் பெண்களின் பெயர்களில் பல குழப்பங்கள் ஏற்படுகின்றன. அவர்கள் சம்பந்தப்பட்ட பல்வேறு குறிப்புகளில் தங்கள் பெயரை மாற்றியாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
திருமணத்திற்கு முன்பு இருந்த அப்பாவின் பெயரிலேயே இருந்து விட்டு போகட்டுமே என்றால், கணவரின் சொத்து உரிமைகளில் பிரச்சினை ஏற்படலாம் என்று கருதுகிறார்கள். இந்த முறைகளை மாற்றி பெண்களின் பெயர்களை சுதந்திரமாக்கினால் என்ன என்ற கேள்வி பெண்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. இன்று கல்லூரிகளில் படிக்கும் காலத்திலே நிறைய பெண்கள் பிரபலமாகிவிடுகிறார்கள்.
அப்போது அவர்களது பெயரோடு அப்பா பெயரை இணைத்திருப்பார்கள். அவர்களுக்கு திருமணம் ஆகிவிடும்போது அவரது பெயர் இணைப்பில் கணவர் பெயரை சேர்க்கும் நிலை ஏற்பட்டால் தங்கள் பெயர் பாப்புலாரிட்டி குறைந்துவிடும் என்று கருதும் பெண்களும் உண்டு. பிரபலமான பெண்களுக்கு இப்படியும் ஒரு பிரச்சினை இருக்கிறது. ஆனாலும் பிரபலமானவரை கணவராக்கிக்கொண்டால், கணவர் சம்பந்தப்பட்ட பெயரை இணைப்பதைத்தவிர வேறு வழியில்லை.
உலக அழகி ஐஸ்வர்யா ராய், தனது திருமணத்திற்கு பின் "ஐஸ்வர்யாராய் பச்சன்'' ஆக பெயர் மாற்றம் பெற்றார். மகாராஷ்டிரா மாநிலத்தில் கணவன், மனைவி வழக்குகளின் இருவரின் ஜாதிப் பெயர் (சர்நேம்) ஒன்றாக இல்லாத பட்சத்தில் வழக்குகள் பதிவு செய்யப்படுவதில்லை. வழக்கு பதிவுக்கு முன்பு மனைவியின் பெயர் மாற்றம் முக்கியம். இந்தத் தொல்லைகளிலிருந்து உச்ச நீதி மன்றம் சமீபத்தில் விலக்கு அளித்திருக்கிறது.
பெண்கள் அவரவர்களுக்கு வசதியான பெயரை வைத்துக் கொள்ளலாம் என்று தீர்ப்பாகியிருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் இதுபோன்ற பிரச்சினைகள் இருக்கவே செய்கின்றன. பெரும்பாலான பெண்கள் தந்தையின் சர்நேமை விட மனமில்லாமல் கணவர் பெயரையும் நிராகரிக்க முடியாமல் இரண்டையும் சேர்த்து வைத்துக் கொள்கிறார்கள். அமெரிக்காவில் கலிபோர்னியாவின் மேயர் "ஆன்டோனியோ'' வின் சர்நேம் "வில்லார்'' என்பதாகும்.
அவர் "கோஸ்னி ரைகோஸா''வை திருமணம் செய்து கொண்டபின்பு தன் பெயருடன் இணைத்து "வில்லாரே கோஸா'' என்று வைத்துக் கொண்டார். ஒரே பெயரில் இருக்கும் பல பிரபலங்கள் தங்கள் பெயருக்கு பின்னாலிருக்கும் சர்நேம் தான் மக்கள் மத்தியில் தங்களை அடையாளம் காட்டுகிறது என்கிறார்கள். பிரியங்கா சோப்ராவையும், பிரியங்கா காந்தியையும் வித்தியாசப்படுத்திக் காட்டுவது சர்நேம் தான். இப்படியும் சிலர் யோசிக்கிறார்கள்.
மும்பையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் "பெண்களுக்கு பின்னாலிருக்கும் பெயர் மாற்றம் என்பது மிகுந்த தொல்லை தரும் விஷயமாக இருக்கிறது. பெயரை மாற்றுவது சுலபமான காரியமல்ல. அதைத் தொடர்ந்து வங்கிக் கணக்கு பேன் கார்டு, பாஸ்போர்ட், சொத்து சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அனைத்திலும் முழுமையாக மாற்ற வேண்டும். புதிய பெயரை வழக்கத்திற்கு கொண்டுவர சில காலமாகும்.
இது கொஞ்சம் சிக்கலான விஷயம் தான். இருந்தாலும் பெண்கள் இதை அனுசரிக்கவேண்டியுள்ளது. காலங்காலமாக நடந்துக் கொண்டிருக்கும் வழிமுறையை திடீரென்று மாற்றிவிட முடியாது. சட்டமும் சில தருணங்களில் இதை அனுசரித்தே இருக்கிறது. குறிப்பிட்ட நபர் இன்னார் தான் என்பதை உறுதி செய்ய இந்த சர்நேம் தான் உதவுகிறது''- என்கிறார்.
கணவர், மனைவி இருவரும் வாழ்க்கையில் இணையும்போது அவர்கள் பெயரும் இணைய வேண்டும் என்பது நம் இந்திய நாட்டு தர்மம். அதன் அடிப்படையில்தான் பெயர் இணைப்பு உருவாக்கப்படுகிறது. கணவரின் சம்பாத்தியம் மற்றும் சொத்துக்களுக்கு முதல் உரிமை கொண்டவர் மனைவி என்பதால், அதற்காக இந்த பெயர் இணைப்பு மாற்றம் அவசியமாகிறது. இது பெண்களுக்கு பாதுகாப்பு தருகிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பெண்கள் எதிர்பார்ப்பும், ஆண்களின் செயல்பாடுகளும்!
» ஆண்களின் சரும பாதுகாப்பு

» தமிழ் பெண்கள் அனைவரும் படையினருக்கு விருந்தாகட்டும், ஆண்களின் இரத்தத்தினால் இந்து சமுத்திரம் சிவப்பாகட்டும் - படையினரை உற்சாகப்படுத்திய கோத்தபாய
» ஆண்களின் மெனோபாஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum