அமெரிக்காவில் வெளியாகும் ‘சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி’!
Page 1 of 1

பொதுவாக ரஜினி, கமல் என பெரிய நடிகர்களின் படங்கள்தான் அமெரிக்காவில் வெளியாகும். இப்போது பட்ஜெட்டில் சின்ன படம் என்றாலும், தரத்தில் பலரது பாராட்டுக்களையும் பெற்ற ஒரு படம் அமெரிக்காவில் ரிலீஸாகிறது.
அது ‘சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி’!
உலகிலேயே முதல்முறையாக HDSLR என்ற கேமரா மூலம் படமாக்கப்பட்டு, லிம்கா உலக சாதனைப் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ள இந்தப் படம் நாளை முதல் தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் வெளியாகிறது.
அமெரிக்காவில் நியூஜெர்ஸி மற்றும் சான் ஜோஸ் நகரில் உள்ள பிக் சினிமாஸ் திரையரங்குகளில் வெளியாகிறது இந்தப் படம்.
‘மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி’ என்ற படத்தை தயாரித்த எஸ்.பி.எஸ் மீடியா ஒர்க்ஸ் இரண்டாவதாக தயாரித்துள்ள படம் இது. அமெரிக்காவில் இப்படத்தை அருண் ரிலீஸ் செய்கிறார்.
இப்படத்தின் ஒளிப்பதிவாளரும், தயாரிப்பாளருமான எஸ்.பி.எஸ் குகன் முதல் முறையாக HDSLR என்ற தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய கேமராவினால் முழுப் படத்தையும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
பெரும்பாலான ஆங்கிலப்படங்களில் ஒருசில காட்சிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது இந்தவகை தொழில்நுட்பம். இந்தியாவில் ‘ஸ்லம் டாக் மில்லினியர்’ என்ற படத்தில் சில காட்சிகளுக்காகவும் பயன்படுத்தினார்கள்.
பார்ப்பதற்கு ஒரு ஸ்டில் கேமரா வடிவில் சிறியதாக இருக்கும் இந்த கேமரா முதல் முறையாக ‘சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி’ படத்தில்தான் முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள எந்த காட்சிக்கும் வேறு வகையான கேமரா பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொழில் நுட்பத்தை எப்படி இந்தப் படத்தில் கையாண்டுள்ளனர் என்பதைக் காண அமெரிக்க திரைப்படக் கலைஞர்கள் சிலரும் ஆர்வமாக உள்ளதாக, அருண் குறிப்பிட்டார்.
ஒரு சனிக்கிழமை சாயங்காலம் 5 மணிக்கு ஆரம்பித்து மறு சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி வரை நடக்கும் ஒருவாரகால சம்பவங்களை க்ரைம், த்ரில்லர், ஆக்ஷன், காதல்,காமெடி கலந்து விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்களாம்.
இப் படத்தில் நாயகனாக கோயம்புத்தூரை சேர்ந்த சரத் அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக பெங்களூரை சேர்ந்த மாலினி அறிமுகமாகிறார். இவர்களுடன் மீரா கிருஷ்ணன், இயக்குனர் ரதிபாலா, இயக்குனர் ரவிபாரதி, செல்வம், மாலதி மற்றும் பலர் நடித்துள்ளனர். ரவிபாரதி இயக்கியுள்ளார்.
அமெரிக்க காட்சி நேரங்கள்:
Movie: Sanikkilamai Saayangalam 5 Mani (NR)
Cast: Sarath, Malini ., Meera Krishnan
Director: Ravi Bharathi, Rathi Bala
Language: Tamil
Fri 12/10/2010 3:50PM 7:05PM 10:35PM
Sat 12/11/2010 12:45PM 3:50PM 7:05PM 10:35PM
Sun 12/12/2010 12:30PM 3:55PM 7:20PM
Mon 12/13/2010 4:20PM 7:40PM
Tue 12/14/2010 4:20PM 7:40PM
Wed 12/15/2010 4:20PM 7:40PM
Thu 12/16/2010 4:20PM 7:40PM

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» லிம்கா சாதனைப் புத்தகத்தில் ‘சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி!’
» லிம்கா சாதனைப் புத்தகத்தில் ‘சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி’!
» சாயங்காலம் சாயங்காலம்
» அமெரிக்காவில் ரஞ்சிதா!
» நவராத்திரி கோலங்கள்: சனிக்கிழமை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum