சகலமும் தரும் சனி
Page 1 of 1
சகலமும் தரும் சனி
சனீஸ்வரன் என்ற பெயரைக் கேட்டாலே பலருக்கும் நடுக்கம் வந்து விடுகிறது. அதிலும் சனிப்பெயர்ச்சி என்றால் சிலர் சுனாமியைக் கண்டவர்கள் போல `திகில்' அடைகிறார்கள். இப்படியெல்லாம் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. நவக்கிரகங்களில் "ஈஸ்வரன்'' என்ற பட்டம் பெற்றவர் சனி ஒருவர் மட்டுமே.
அவர் கெடுதல் செய்வாராப அவருக்கு விருப்பமானவற்றை செய்து வழிபாடு செய்தால் நிச்சயம் அவர் நமக்கு நல்லது செய்வார். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் அவர் நல்லவர்களுக்கு நல்லவர். கெட்டவர்களுக்கு கெட்டவர். திருக்கணிதப்படி கடந்த 15-11-2011 அன்று முதல் சனிப்பெயர்ச்சி நடப்பில் உள்ளது.
ஆனால் வாக்கிய பஞ்சாங்கப்படி அடுத்த மாதம் (டிசம்பர்) 21-ந்தேதி (புதன்கிழமை) காலை 6.55 மணிக்கு கன்னி ராசியில் இருந்து தனது உச்ச வீடான துலாம் ராசிக்குள் நுழைகிறார். 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ந்தேதி வரை அவர் துலாம் ராசியில் ஆதிக்கம் செலுத்துவார். இந்த காலத்தில் நாடெங்கும் நிறைய மாறுதல்கள் ஏற்படும்.
மக்கள் கூடுதல் வசதிகளைப் பெறுவார்கள். உலக நாடுகளில் இந்தியா முக்கிய இடத்தை எட்டிப் பிடிக்கும். இதற்கு காரணமாக இருக்கும் சனீஸ்வரனை உரிய முறையில் வணங்கினால் சகலமும் பெறலாம். அதற்கு முன்னதாக சனி என்றால் யார்? அவரது குணம் என்ன? அவரது செயல்பாடு எப்படி இருக்கும்? அவரது அருளைப் பெறுவது எப்படி? என்னென்ன பரிகாரம் செய்தால் சனியை மகிழ்வித்து பலன் பெறலாம் என்பன போன்றவற்றை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» திருப்பங்கள் தரும் திருப்பராய்த்துறை
» சகலமும் கிடைக்க சதுரகிரிக்கு வாங்க
» புகழ் தரும் ராகு ஞானம் தரும் கேது
» புடவை தரும் அம்மன்
» அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் 12.12.12
» சகலமும் கிடைக்க சதுரகிரிக்கு வாங்க
» புகழ் தரும் ராகு ஞானம் தரும் கேது
» புடவை தரும் அம்மன்
» அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் 12.12.12
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum