தவிர்க்க வேண்டிய இணையதள நட்புகள்
Page 1 of 1
தவிர்க்க வேண்டிய இணையதள நட்புகள்
பெண்களின் கல்வியறிவும், பொது அறிவும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பெரும்பாலான பெண்கள் பேஸ்புக், ட்விட்டர், ஸ்கைப் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகிறார்கள்.
இதுபோன்ற சமூக வலைத்தளங்களில் தற்கால பெண்கள் முன்பின் தெரியாத ஆண் நண்பர்களுடன் அதிக தொடர்பு வைத்துள்ளார்க்ள். இதன் மூலம் அவர்களின் நட்பு செல்போன்கள் எண்களை பரிமாறி கொள்ளுதல் மற்றும் வெளியிடங்களில் தனிமையில் சந்தித்தல் போன்ற தவறுகளுக்கு காரணமாக அமைகின்றன.சில நேரங்களில் எல்லை தாண்டி கள்ளக்காதலாகவும் கூட மாற வாய்ப்புள்ளது.மேலும் பல பெண்களுடன் தொடர்பிலிருக்கும் ஆண்களுடனும் சகவாசம் ஏற்பட நேரிடுகிறது.
பின்னர் அவர்களை பற்றி உண்மை நிலவரங்கள் தெரியும் போது மன உளைச்சலுக்கு ஆளாகி நடைப்பிண வாழ்க்கை மேற்கொள்ளவும், சிலர் தற்கொலை செய்யவும் வழிவகுக்கிறது.
எனவே பெண்கள் இதுபோன்ற சமூக வலைத்தளங்களில் முன்பின் தெரியாத ஆண்களை நண்பர்களாக அங்கீகரிப்பதை தவிர்க்க வேண்டும். ஒருவேளை அத்தகைய நபர்கள் தங்களை நண்பர்களாக ஏற்றுக்கொள்ளும் படி தொந்தரவு செய்யும் பட்சத்தில் அவர்களது கணக்கை தடை(block) செய்யும் தேர்வை தேர்ந்தெடுக்கலாம். அவ்வாறு தடை செய்தால் அந்த நபர்கள் உங்களது கணக்கை மேற்கொண்டு காண இயலாது.
என்ன எனதருமை பெண் தோழிகளே இதனை படித்தவுடன் கெட்ட நண்பர்களின் பழக்கத்திற்கு தடை போட முடிவெடுத்துவிட்டீர்களா?
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அறிய வேண்டிய நீதிகளும், தவிர்க்க வேண்டிய தீய குணங்களும்
» கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய அழகு பொருட்கள்
» பயணம் செய்வதற்கு முன் தவிர்க்க பட வேண்டிய உணவுகள்
» இணையதள அரட்டை
» சிறுநீரக பாதிப்பைத் தவிர்க்க...
» கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய அழகு பொருட்கள்
» பயணம் செய்வதற்கு முன் தவிர்க்க பட வேண்டிய உணவுகள்
» இணையதள அரட்டை
» சிறுநீரக பாதிப்பைத் தவிர்க்க...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum