தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சீமானுடன் கைகோர்க்கும் எஸ்ஏசி!

Go down

சீமானுடன் கைகோர்க்கும் எஸ்ஏசி! Empty சீமானுடன் கைகோர்க்கும் எஸ்ஏசி!

Post  ishwarya Sat Apr 20, 2013 5:43 pm

விஜய்யும் சீமானும் ஏற்கெனவே கூட்டணி போட்டுவிட்டார்கள் பகலவன் படத்துக்காக. விஜய்யின் அரசியலுக்கு சரியான களம் அமைத்துத் தர நானாச்சு என்ற சபதத்தோடுதான் சீமான் இந்தக் கதையை பக்காவாகத் தயார் செய்திருக்கிறாராம்.

இன்னொரு பக்கம், விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகரனின் அடுத்த படத்தின் ஹீரோவுக்கு நிகரான புரட்சிகரமான வேடத்தில் நடிக்கவிருக்கிறார் சீமான்.

இந்தப் படத்தின் பெயர் சட்டப்படி குற்றம் என்று முதலில் வைக்கப்பட்டிருந்தது. இப்போது அதை சட்டம் என்ன செய்யும் என்று மாற்றியுள்ளாராம் எஸ்ஏசி.

விஜய்- சீமான் கூட்டணியில் உருவாகும் படத்துக்கு முன்பே இந்தப் படத்தை முடித்து வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். வழக்கமாக சட்டத்தைச் சாடும் வசனங்களை அதிகமாக வைக்கும் எஸ்ஏசி, இந்தப் படத்தில் இப்போதைய சூழலில் தாங்கள் அனுபவிக்கும் சங்கடங்களை மனதில் கொண்டு அரசியலையும் ஒரு பிடிபிடிக்கப் போகிறாராம்.

அதற்கு தோதாக சீமானும் இருப்பதால், அரசியல் அனல் பறக்கும் இந்தப் படத்தில் என்கிறார்கள் ஏஸ்ஏ சந்திரசேகர் வட்டாரத்தில்.

சரி… படத்தில் விஜய் உண்டா? ஒரு காட்சியில் சீமானுடன் விஜய் தோன்றுவது போல திட்டமிட்டுள்ளனராம்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum