தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

படப்பிடிப்பில் மயங்கி விழுந்த விஷ்ணுப்ரியா

Go down

 படப்பிடிப்பில் மயங்கி விழுந்த விஷ்ணுப்ரியா Empty படப்பிடிப்பில் மயங்கி விழுந்த விஷ்ணுப்ரியா

Post  ishwarya Sat Apr 20, 2013 4:18 pm

ஊதாரி படப்பிடிப்பின் போது நடிகை விஷ்ணுப்ரியா மயங்கி விழுந்தார். இதனால் படக்குழுவினர் பதறிபோனார்கள்.

பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான எம்.பாஸ்கரின் மகன் பாலாஜி பிரபு. இவர் ஊதாரி என்ற படத்தை தயாரித்து வருகிறார். படத்தை சக்தி கிருஷ்ணா டைரக்டு செய்கிறார். இந்த படத்தில், நாயகனாக வினோத்தும், நாயகியாக விஷ்ணுப்ரியாவும் நடித்து வருகின்றனர். மலையாள நடிகையான விஷ்ணுப்ரியா நயன்தாரா, அசின் போன்றவர்களை விமர்சித்து பேட்டி கொடுத்து பரபரப்பு ஏற்படுத்தியவர்.

இதனிடைய ஊதாரி படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, விஷ்ணுப்ரியா திடீர் என்று மயங்கி விழுந்தார். இதனால் படக்குழுவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு உடனடியாக டாக்டர் வரவழைக்கப்பட்டார். விஷ்ணுப்ரியாவை பரிசோதித்த அவர், “சாதாரண மயக்கம்தான். சரியாக சாப்பிடாமல் இருந்ததால் வந்த மயக்கம்தான் என்று கூறி, நடிகையை தெளியவைத்தார். சிறிது நேர ஓய்வுக்குப் பின் அவர், மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum