தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பரிசு பெற்ற கதைகள்

Go down

பரிசு பெற்ற கதைகள் Empty பரிசு பெற்ற கதைகள்

Post  oviya Sat Apr 20, 2013 3:40 pm

விலைரூ.300
ஆசிரியர் : பதிப்பக வெளியீடு
வெளியீடு: வசந்தா பதிப்பகம்
பகுதி: கதைகள்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
வசந்தா பிரசுரம், பு.எண். 15, ப.எ. 6 ஜெய சங்கர் தெரு, சென்னை - 600 033 (போன் 044-2474 2227) பக்கங்கள் 542,
தினமலர் நாளிதழ் கடந்த 28 ஆண்டுகளாக, ஞாயிறு அன்று வாரமலர் இணைப்பு இதழ் வெளியிட்டு வருகிறது. ஒரு வார இதழில் வெளிவரும் சுவாரஸ்யமான, சுவையான விஷயங்களுடன் வாசகர்களின் பங்கேற்புக்கும், எழுத்தாளர்களின் பங்களிப்பிற்கும், நிறைய வாய்ப்பளிக்கும். ஜனரஞ்சகமான இதழாக வெளிவந்து கொண்டிருக்கும் இந்த வாரமலர், வருடந்தோறும் நிறுவனர் டி.வி.ஆர்., அவர்களின் நினைவாக நடத்தப்படும். சிறுகதைப் போட்டியை ஒரு வகையில் பார்த்தால் "ஹை-லைட்டான விஷயம் என்றே கூற வேண்டும். தமிழ்நாட்டின் மூலை முடுக்குகள், குக்கிராமங்கள், பெரு நகரங்கள் எனப் பல இடங்களில் வசிக்கும் எழுதும் ஆசை கொண்ட ஆயிரக்கணக்கான வாசக எழுத்தாளர்கள் பங்கு கொள்ளும் இந்த சிறுகதைப்போட்டி, நல்ல சிறுகதைகளையும் புதிய எழுத்தாளர்களையும் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் அரிய இலக்கிய பணியை தொய்வின்றி தொடர்ந்து செய்து வருகிறது. பரிசு பெறும் கதைகளும், அதை எழுதிய படைப்பாளர்களையும் பற்றி படித்து அறிந்து கொள்ளும் போது, குடத்திற்குள் இருந்த எத்தனை தீபங்கள் இன்றைய தினம் மலை உச்சியில் ஒளிவீசிக் கொண்டிருக்கின்றன, என்பதை உணர முடிகிறது. வளரும் தலைமுறையினருக்கு, இந்த வாய்ப்பையும் வளர்த்தெடுக்க வேண்டிய சிறுகதைக் கலைக்கு இந்த ஊட்டசக்தியையும் வழங்கி வரும் நாளிதழ் நிறுவனர் டி.வி.ஆர்., நினைவு சிறுகதைப் போட்டியை எத்துணை பாராட்டினாலும் தகும். எழுத்தாளர்களுக்கு "தினமலர் வழங்கும் சன்மானத் தொகையும் கணிசமானது என்பதை இங்கு குறிப்பிடுவதும் மிகப் பொருத்தமானதே. 2002 ஆண்டு முதல் 2009 வரை நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற, தேர்வு செய்யப்பட்ட சிறந்த கதைகளில் சிறந்த அறுபத்து ஐந்து சிறுகதைகளைத் தேர்வு செய்து மிகச் சிறந்த தொகுப்பாக இந்த நூலை வசந்தா பிரசுரத்தார் வெளியிட்டுள்ளனர்.
ஒரு சில எழுத்தாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை, பரிசு பெறத்தக்க படைப்புக்களை வழங்கிய பாக்கியம் பெற்றிருப்பதை இந்த தொகுப்பில் காண முடிகிறது. கதைக் கரு, அந்தந்த கால சமூகச் சூழ்நிலையை படம் பிடித்துக்காட்டுகிறது. ஒரு சில கதைகள், சமூகப்போக்கைப் பாடியும் உறங்கும் மனசாட்சியை உசுப்பி விடும் வகையிலும் அமைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது.இன்னும் சற்று ஆழமாக, அலசல் விமர்சனப் பார்வையில் இந்த சிறுகதைகளில் நமது கவனத்தைப் பதித்தால் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் போக்கை (ஃடிtஞுணூச்ணூதூ கூணூஞுணஞீ) ஒரு எட்டாண்டு கால ஆய்வுக்கு உட்படுத்தும் வகையில் அமைந்துள்ளதையும் கவனிக்கலாம். <உதாரணமாக ஷாராஜ் (2002) எழுதியுள்ள "ஈஸ்வர அல்லா ச.தேவராஜன் (2007) எழுதியுள்ள "பெண்ணாயுதம் செய்வோம் எஸ்.ஆதினமிளகி (2008) எழுதியுள்ள "சுடலை சிவகாசி ராஜ்கதிர் எழுதியுள்ள 33 சதவீதம் - ஆகிய நான்கு சிறுகதைகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இது தவிர மீதமுள்ள அறுபத்தோரு கதைகளிலும் ஏதோ ஒன்று கதை இலக்கிய வளர்ச்சிக்கு உதவும் வகையில் இருப்பதைப் பார்க்கலாம். வாரம் இரண்டு சிறுகதை வெளியிட்டு வரும், வாரமலர் இது போன்ற போட்டி மூலம் சிறுகதை வளர்ச்சிக்கு பயனுள்ள வகையில் பங்காற்றி வருகின்றது.வாரமலர், பொறுப்பாசிரியர் கி.ராமசுப்பு ரத்தினச் சுருக்கமாக அணிந்துரை வழங்கி இந்தத் தொகுப்பிற்கு பெருமை சேர்த்திருக்கிறார்
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum