ராம ராஜ்யம்
Page 1 of 1
ராம ராஜ்யம்
விலைரூ.130
ஆசிரியர் : கே.தேவநாராயணன்
வெளியீடு: எஸ்.கே.எம்., பப்ளிகேஷன்ஸ்
பகுதி: கதைகள்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
எல்.கே.எம்.பப்ளிகேஷன், 15/4, ராமநாதன் தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 288)
ராமாயணம் படிப்பதும், கேட்பதும், "டிவியில் பார்ப்பதும் கூட தமிழக மக்களுக்கு என்றும் இனிக்க கூடிய ஒன்று. எத்தனை தடவை படித்தாலும், கேட்டாலும் அலுப்பில்லாமல் அனுபவிக்கும் வகையில் ராமன் கதை உள்ளது. காந்தியடிகள் இந்தியாவில் ராமராஜ்யம் நடைபெற ஆசைப்பட்டார். அவர் கனவு கண்ட ராமராஜ்யம் எப்படியிருக்க வேண்டும் என்று இந்நூல் விவரிக்கிறது. தேவநாராயணன் தம் 82ம் வயதில் எழுதியுள்ள ஓர் அருமையான நூலிது. கதராடையே அணிந்து, தூய மனத்துடன் வாழ்ந்த அவரால் திரையுலகிலும், பொது வாழ்விலும் பலர் இன்று ஏற்றம் பெற்றிருக்கின்றனர். ஆனால், உண்மையே பேச, நன்மையே நினைத்த, காந்திய சீலர், எளிமையாக பழகியும், தம் கவிதைகளை இனிமையாக பாடியும் வாழ்ந்தவர். புதுமையாக ராமாயணத்தின் பல செய்திகளை விளக்கியுள்ள அவரது, "ராமராஜ்யம் படிக்கப் படிக்க சுவையாக உள்ளது. மன்னனுக்காக மக்கள் இல்லை; மக்களுக்காக மன்னன் என்ற கருத்தை நிலை நாட்டியும், ராமனை காட்டிற்கு அனுப்பிய கைகேயின் செயல் சரியானதே என்று விளக்கியும், வெள்ளையன் (வண்ணான்) பேச்சால் சீதையை நிறைமாத கர்ப்பிணியாக இருந்தவளை காட்டிற்கு அனுப்பியது. ராஜா ராமனின் நேர்மையான ஆட்சிக்கு சாட்சி என்று கூறுவதும், இந்நூலாசிரியரின் துணிவான எழுத்தாற்றலுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். ஒரு சுவையான நாவல் படிக்கும் விறுவிறுப்பை இந்நூல் ஏற்படுத்துகிறது. ஒரு சில இடங்களில் அச்சுப்பிழைகள் இருந்த போதிலும், ஆசிரியரின் எளிய நடை நம்மை வியக்க வைக்கிறது. அனைவரும் படிக்க வேண்டிய அருமையான நூல்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum