ரஜினிகாந்த் எனக்கு எந்த அறிவுரையும் கூறுவதில்லை! – தனுஷ்
Page 1 of 1

நான் என் போக்கில் போவதுதான் ரஜினிக்குப் பிடிக்கும். அதனால் எனக்கு எந்த அவர் அறிவுரையும் கூறுவதில்லை, என்றார் தனுஷ்.
தனுஷ் கவுரவ வேடத்தில் நடிக்கும் சீடன் படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் தனுஷ் குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் அவரிடமும் அவரது குடும்பத்தினரிடமும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களின் தொகுப்பு:
சீடன் எந்த மாதிரியான படம்?
இயக்குநர் சுப்பிரமணியம் சிவா: எத்தனையோ பேர் காதலிக்கிறார்கள். எல்லோரும் வாழ்க்கையில் இணைவதில்லை. அப்படி காதலிக்கிறவர்கள் வாழ்க்கையில் இணைவதற்கு ஒரு சக்தி தேவை. அந்த சக்தி பற்றி சொல்கிற படம்தான் சீடன்.
இந்த படத்தில் தனுசுக்கு கவுரவ வேடமா?
தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா: அது தப்பு. கவுரவ வேடம் அல்ல. அவரை கவுரவப்படுத்துகிற வேடம் என்று சொல்வேன். படத்தில், தனுஷ் வருகிற நேரம் குறைவுதான். ஆனால் அவர் படம் முழுக்க இருக்கிற மாதிரி தோணும்.
முதலில் தனுசை சினிமாவில் நடிக்கவைத்தபோது உங்கள் உணர்வு எப்படி இருந்தது?
தனுஷின் தாய் விஜயலட்சுமி: முதலில் தனுசை நடிக்க அழைத்தபோது, எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. குழந்தையின் படிப்பு கெட்டுவிடுமே என்று பயந்தேன். தனுசுக்கும் அந்த எண்ணம்தான் இருந்தது. ‘இந்த ஒரு படத்துக்கு மட்டும்தான்’ என்று அவங்க அப்பா சொன்னார். ஆனால் அவன் நடிப்பை பற்றி எல்லோரும் பாராட்டி பேசியபோது, என் மனசு சமாதானம் ஆனது. நம் பிள்ளை தொடர்ந்து நடிக்கட்டும் என்று நினைத்தேன்.
மனைவியாக தனுசுக்கு எந்த அளவுக்கு பக்கபலமாக இருக்கிறீர்கள்?
தனுசின் மனைவி ஐஸ்வர்யா தனுஷ்: நான் எந்த அளவுக்கு ஆதரவாக இருக்கிறேன் என்று தெரியவில்லை. ஆனால், தொந்தரவா இருக்கக் கூடாது என்று மட்டும் புரிகிறது. நடிப்பு எவ்வளவு கஷ்டம் என்று தெரிந்துகொண்டேன். முன்பெல்லாம் அவர் படப்பிடிப்புக்கு போனால் அடிக்கடி போன் செய்து தொல்லை கொடுப்பேன். இப்போதெல்லாம் போன் பண்ணுவதே இல்லை. அவருடைய கஷ்டம் எனக்கு புரிவதற்கு இரண்டு மூன்று வருடம் ஆச்சு.
மருமகன் தனுஷ் பற்றி உங்கள் கருத்து என்ன?
லதா ரஜினிகாந்த்: அவர் மருமகன் இல்லை. என் மகன் மாதிரி. அவர் ஒரு முழுமையான நடிகர். அவரை பற்றி பேசும்போது எங்களுக்கு பெருமையாக இருக்கும். அவருடைய பெற்றோர்களைப்போலவே நாங்களும் பெருமைப்படுகிறோம்.
உங்கள் மாமனார் ரஜினிகாந்த் உங்களுக்கு அறிவுரை எதுவும் கூறுவது உண்டா?
தனுஷ்: எந்த அறிவுரையும் தரமாட்டார். எந்த டிப்ஸும் தரமாட்டார். என் போக்கில் நான் போவதே அவருக்கு பிடிக்கும். ஆனால், கமல் சார் சில கமெண்ட்ஸ் சொல்வார். அது நேர்மையாக இருக்கும்.
உங்கள் தம்பி தனுஷ் நடிப்பு பற்றி உங்களின் கணிப்பு என்ன?
இயக்குநர் செல்வராகவன்: தனுஷ் நல்ல நடிகர். அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவருடைய நடிப்பை குறை சொல்ல மாட்டேன். நடிக்கிற படத்தை பற்றி விமர்சிப்பேன்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சஞ்சய் தத்திற்கு கொடுக்கப்பட்ட தண்டனை எனக்கு வேதனையளிக்கிறது… ரஜினிகாந்த்

» இசபெல் மருத்துவமனையில் ரஜினிகாந்த்: புகைப்படம் வெளியிட்டார் தனுஷ்
» இன்னும் பத்தே நாளில் ரஜினிகாந்த் வீடு திரும்பி விடுவார் – தனுஷ்
» அரசியலுக்கு வர எனக்கு எந்த தகுதியும் கிடையாது : அஜித் அதிரடி பேட்டி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum