தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மன அழுத்தம் குறைய...

Go down

மன அழுத்தம் குறைய... Empty மன அழுத்தம் குறைய...

Post  meenu Mon Jan 21, 2013 2:00 pm

மன அழுத்தமும் ஒரு நோய் தான். இது பலவிதமான நோய்களுக்கு மூல காரணமாக உள்ளது. கவலை, சோர்வு, டென்ஷன், முதுகு வலி, கழுத்து வலி, பிரஷர், தலைவலி, தூக்கமின்மையை ஏற்படுத்த வல்லது. குடும்பத்தில் வன்முறைகள் தலைதூக்கமாலிருக்க அன்பு, ஒருவரையொருவர் புரிந்து கொள்ளுதலும் மிக அவசியம்.

பெண்களின் மன அழுத்தத்துக்கு உடல் ரீதியாகவும் காரணங்கள் உள்ளன. ஹார்மோன்களின் செயல்பாடுகளும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இனம் புரியாத காரணங்களால் மனச் சோர்வு ஏற்படலாம். மன அழுத்தத்திற்கு குறிப்பிட்ட காரணங்கள் உண்டு.

1. நமக்கு நம்பிக்கையானவர்கள் பிடித்தமானவர்களுடன் நமது எண்ணங்களை பகிர்ந்து கொள்ளலாம். மனம் விட்டு பேசுவதன் மூலம் மன இறுக்கம் குறையும்.

2. அமைதியான சூழ்நிலையில் இருப்பதுபோல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

3. மனதிற்கு பிடித்த இனிமையான இசையை கேட்கலாம்.

4. தனித்திருப்பதை முடிந்தவரை தவிர்க்கலாம்

5. நகைச்சுவை காட்சிகளை பார்த்து நம் எண்ணங்களை திசை திருப்பலாம்

6. சூழ்நிலையை மாற்றி பிடித்த செயல்களை செய்வதன் மூலம் மனச் சோர்வை அகற்றலாம்

7. பழச்சாறுகள் பருகலாம். பழச்சாறுகள் புத்துணர்வுவை தரும். மன அழுத்தத்தைப் போக்கும்.

8. மன சோர்வடையும் போது நண்பர்களுடன் பேசலாம்

9. கோயில்களுக்கு செல்லலாம்

10. செடி, கொடி, மரங்கள் நிறைந்த பசுமையான சூழ்நிலையில் இருப்பதுபோல் பார்த்துக் கொள்ளலாம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum