தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குறை தீர்க்கும் குகன்

Go down

குறை தீர்க்கும் குகன்  Empty குறை தீர்க்கும் குகன்

Post  amma Fri Jan 11, 2013 4:38 pm

அதிமதுரபாண்டியன் என்ற மன்னன் வெகுகாலத் துக்கு முன், பழங்கோட்டையைத்
தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான். அவனுடைய அரண்மனைக்குச் சற்று தொலை வில்
உவணவனம் என்ற காடு இருந்தது. இந்தக் காட்டில் 300 அடி உயரத்தில் மலை ஒன்று
கம்பீரமாக காட்சியளித்து வந்தது. இந்த மலையை உவணகிரி (கழுகு மலை)
என்றழைப்பர்.
ஒருநாள் அதிமதுரபாண்டியன் வேட்டை யாடச் சென்றான்.
நாழிகைகள் கடந்ததும் களைப்புற்று உவணவனத்திலுள்ள ஒரு வேங்கை மரத்தடியில்
இளைப்பாறினான். அப்போதுதான் அந்த அதிசயத்தை அவன் பார்க்க நேர்ந்தது.

ஒரு
பசு தானாகவே ஒரு பாறையின் மேல் பால் சுரந்துக் கொண்டிருந்தது. அதே நேரம்,
கோயில் மணியோசையும் ஒலித்தது. மன்னன் வியப்புற்றான். சுற்றும் முற்றும்
பார்த்தான். அங்கே கோயில் இருப்பதற்கான அறிகுறியே தெரிய வில்லை. பின்னர்,
பசு பால் சுரந்த பாறையை அடைந்தான். அரசன் வருவதைக் கண்டதும் பசு மருண்டு
ஓடியது. மணி ஓசையும் நின்றது. மன்னன் ஊர் திரும்பினான். மறுநாள் முருகன்
அடியார்கள் இருவர் அரசனை சந்தித்து, தம் கனவில் முருகன் வந்து, பசு பால்
சுரந்த பாறை இருக்கும் இடத்தில் தனக்கு ஒரு அழகான ஆலயம் அமைக்கும்படியும்,
இச்செய்தியை வேந்தனிடம் நேரில் சொல்லுமாறு கட்டளையிட்டு மறைந்ததாக
தெரிவித்தார்கள்.

தான் நேரில் கண்ட காட்சியை முருகன் அடியார்களின்
கனவில் கூறியிருப் பதைக் கண்ட அரசன் ஆச்சர்யத்துடன் தனது பரிவாரங்கள் சூழ,
பசு பால் சுரந்த பாறையை அடைந்தான். உடன் வந்தவர்கள் பாறையை
அப்புறப்படுத்தினார்கள். அடியில் ஒரு குகையையும், குகைக்குள் மயிலின் மீது
அமர்ந்த முருகன் சிலையையும் கண்டார்கள். மன்னன் நெஞ்சார அதை எடுத்து
அணைத்துக்கொண்டான். வனத்தைத் திருத்தி முருகனுக்கு நல்லமுறையில் கோயில்
எழுப்பினான். ஊரைத் திருத்தி, உவணவனம் என்ற பெயரைக் கழுகுமலை எனவும் மாற்றி
அமைத்தான்.

கழுகு மலைக்கு அருகில் வானரமுட்டி என்ற ஊர் இருக்கிறது.
ராமர் இந்த வழியாக இலங்கைக்கு தன் படை களுடன் சென்றபோது, படை வீரர்களான
வான ரங்கள் இங்கு தங்கியதால் இந்த ஊருக்கு வானர முட்டி என்ற பெயர்
வந்ததாகச் சொல்கிறார் கள். அதேபோல் சம்பாதி என்ற கழுகு முனிவர், இங்குள்ள
இறைவனை பூசித்ததால் கழுகுமலை என்ற பெயர் வந்ததாகவும் குறிப்பு உண்டு.
குடைவரைக் கோயிலின் விமானமாக மலையே திகழ்கிறது. கோயிலை வலம்வர வேண்டுமானால்
மலையைச் சுற்றித்தான் வர வேண்டும். அதனாலேயே கிரிவலம் வருவது இங்கு சிறந்த
வழிபாடாகப் பின்பற்றப்படுகிறது.

ராவணனால் பலவந்தமாக கடத்திச்
செல்லப்பட்ட சீதையை மீட்கும் முயற்சியில் தோல்வியுற்ற ஜடாயுவை ராமர்
சந்திக்கிறார். அவரிடம் நடந்த விஷயத்தைக் கூறிய ஜடாயு, அந்த நிறைவிலேயே
இறக்கிறார். தன் பொருட்டு இறந்த ஜடாயுவுக்கு ராமர் ஈமக்கிரியைகள்
செய்கிறார். இதை அனுமன் மூலம் அறிந்த ஜடாயுவின் சகோதரனான சம்பாதி, தன்
சகோதரனுக்கு இறுதிக்கடன் செய்ய இயலாது போன தனக்குப் பெரும் பாவம் சூழ்ந்ததே
என ராமனிடம் வருந்தி நின்றான். உடனே ராமன், சம்பாதியிடம், ‘நீ
கழுகுமலைக்கு சென்று அங்குள்ள ஆம்பல் நதியில் நீராடி, மயில் மீது
அமர்ந்திருக்கும் முருகனை பூஜை செய்தால் உன் பாவம் விலகும்’ என்றார்.
அதன்படியே செய்து, பாவம் நீங்கப் பெற்றான் சம்பாதி.

இந்த மலை 300
அடி உயரம் கொண்டது. மலையைக் குடைந்து கருவறையும், அர்த்த மண்டபமும்
உருவாக்கப் பட்டுள்ளன. கருவறை யில் வள்ளிதெய்வா னையோடு முருகன்
காட்சியளிக்கிறார். மற்ற கோயில்களில் உள்ளது போல் முருகனின் வாகனமான மயில்,
வலது பக்கத்தில் இல்லாமல், இடது பக்கத்தில் இருப்பது தனிச்சிறப்பு.
இங்குள்ள மூர்த்திக்கு ஒரு முகமும், ஆறுகரங்களும் உள்ளன. தாரகாசுரனை வதம்
செய்த கோலம் இது என்கிறார்கள்.

இப்புண்ணியத்தலம் மிகப் பழமையானது.
கல்வெட்டுகள் மூலம் இந்தக் கோயில் கி.பி. எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்தது
என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மலையின் உச்சியில் பிள்ளையார்
கோயிலும், கோயிலுக்குச் செல்லும் வழியில் சமணர் சிலைகளும், அய்யனார்
கோயிலும், குகையும், சுனைகளும் உள்ளன. இங்குள்ள வெட்டுவான் கோயில், சிற்ப
வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதன்நீளம் 47 அடி, உயரம் 30 அடி.
மலையைக் குடைந்து, அதன் நடுப்பகுதியில் 30 அடி ஆழத்திற்கு சதுரமாகப் பல
வேலைப்பாடுகளுடன் வெட்டப்பட்டுள்ளது. இதில் இரண்டு நிலை விமானம்
காணப்படுகின்றன. இதனை எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோயிலுடன் ஒப்பிட்டுச்
சொல்கிறார்கள்.

முருகன் மேற்கு முகமாக இருக்கும் கருவறையையுடைய
மலையை சிவசொரூபம் என்கின்றன வேதாகம நூல்கள். கந்த புராணத்தில், குன்று
தோராடிய குமரன் மேற்கு முகமாக உள்ள தலங்கள் மூன்று என்றும், அவற்றில்
ராஜபோகமாக முருகன் வீற்றிருக்கும் தலம் கழுகுமலையே என்றும்
குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தலம் கழுகுமலை, தென்பழனி கழுகாசலம், உவணகிரி,
சுஜமுகபர்வதம், சம்பாதிக்ஷேத்திரம் என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.
தென்பழனி என்றும் புராணங்கள் சிறப்பிக்கின்றன.

இக்கோயில்
வளாகத்தினுள் குமாரத் தெப்பம் உள்ளது. குடிநீராகவும், நோய் தீர்க்கும்
மருந்தாகவும் இக்குளத்தின் நீரை இவ்வூரில் வசிக்கும் மக்கள் பயன்படுத்தி
வருகின்றனர்.
மதுரையை ஆண்ட கிருஷ்ணப்ப நாயக்கரால் எட்டையபுரம்
மன்னருக்கு கழுகுமலைச் சீமை வழங்கப்பட்டது. அந்நாள் முதல் இந்நாள் வரை
எட்டையபுர மன்னர் பரம்பரையினர் இத்திருக் கோயிலின் திருப்பணிகளை செய்து
வருகிறார்கள். மஹா மண்டபங்கள் தவிர, ஆறுமுக நயினாருக்கு கருவறை,
பள்ளியறையில் வேலைப்பாடுகள் அமைந்த வெள்ளி யானை, குதிரை, அன்னம், மயில்,
கைலாசபர்வதம் முதலிய வாகனங்களும், யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட
பல்லக்குகளும், விலை உயர்ந்த நவரத்தின ஆபரணங்களும் எட்டையபுரம் மன்னர்களால்
செய்விக்கப்பட்டது தான்.

குகைக்குள்ளே கொலுவிருந்து பக்தர்களின் குறை தீர்க்க காத்திருக்கிறான் குகன். அவன் தாள் பணிந்து நலம் பெறுவோம்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum