வ.உ.சி. கண்ட மெய்ப்பொருள்
Page 1 of 1
வ.உ.சி. கண்ட மெய்ப்பொருள்
விலைரூ.75
ஆசிரியர் : டாக்டர் அரங்க. ராமலிங்கம்
வெளியீடு: வானதி பதிப்பகம்
பகுதி: பொது
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
வ.உ.சி. கண்ட மெய்ப்பொருள் : நூலாசிரியர்: டாக்டர் அரங்க. ராமலிங்கம். வெளியீடு: வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்:240)
"கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சி.,யை இதுவரை உலகம் கண்ட பார்வையில் இருந்து மாறுபட்டு, புதிய கோணத்தில் இந்நூலாசிரியர் ஆய்வு செய்துள்ளார். வ.உ.சி.,யை மெய்ப்பொருள் உணர்ந்த மெஞ்ஞானி என்று நூலாசிரியர் விளக்குவது அவரின் புலமைக்குச் சான்றாக உள்ளது.
வ.உ.சி., தம் குழந்தைகளுக்கு வாலீஸ்வரன், சுப்பிரமணியன், வேதவல்லி என்றெல்லாம் பெயர் வைக்கக் காரணம் குறித்து நாம் படிக்கும்போது வ.உ.சி.,யின் நன்றியுணர்வை அறிகிறோம் (பக். 33). "மெய்யறிவு' என்ற நூலை விளக்கும் இடங்களும் (பக்.48-68) "மெய்யறம்' என்ற நூலை விளக்கும் இடங்களும் (பக்.69-89) நூலாசிரியரின் அறிவின் நுட்பத்திற்குச் சான்றாகும்.
மேல்நாட்டறிஞர் ஜேம்ஸ் ஆலன் எழுதியுள்ள நான்கு நூல்களுக்கு வ.உ.சி., அகமே புறம், மனம் போல வாழ்வு, வலிமைக்கு மார்க்கம், சாந்திக்கு மார்க்கம் என்ற பெயரிட்டு மொழிபெயர்ப்பு செய்துள்ளதை இந்நூலாசிரியர் எளிய நடையில் விளக்கியுள்ள பாங்கு நம் மனதை மகிழ்விக்கிறது (பக்.89-155).
வ.உ.சி., எழுதியுள்ள நூல்களில் திருக்குறள் அறத்துப் பால் நூலையும், இன்னிலை என்ற நூலுக்கு எழுதியுள்ள விருத்தி உரையும், சிவஞானபோத உரையும், அவரின் தனிப் பாடல்களில் காணும் மெய்ப்பொருளையும் படிக்கிறபோது வ.உ.சி.,யின் புதிய பரிணாமத்தை உணர்கிறோம். (பக்.156-220).
நூலாசிரியரின் நிறைவுரை நூலின் மொத்தக் கருத்துக்களையும் பட்டியலிட்டுக் காட்டும் விதத்தில் அமைந்துள்ளது. அருமையான நூலைப் படித்த மன நிறைவு இந்நூலைப் படித்தால் கிடைக்கும் என்பது உறுதி.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» மெய்ப்பொருள் மெய்ப்பொருள்
» மெய்ப்பொருள்
» திருக்குறள் மெய்ப்பொருள் உரை
» வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
» கம்பன் கண்ட அரசியல்
» மெய்ப்பொருள்
» திருக்குறள் மெய்ப்பொருள் உரை
» வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
» கம்பன் கண்ட அரசியல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum