தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சபரிமலையில் வழிபாடும், ஐதீகமும்

Go down

சபரிமலையில் வழிபாடும், ஐதீகமும் Empty சபரிமலையில் வழிபாடும், ஐதீகமும்

Post  gandhimathi Mon Jan 21, 2013 1:55 pm



எருமேலி...

தர்மசாஸ்தா சன்னதி (எருமேலி) அய்யப்ப பக்தர்கள் இச்சன்னதியில் அவசியம் பேட்டை துள்ள வேண்டும். மணிகண்டன் ராஜசேகரமன்னன் ஆணைப்படி காட்டுக்கு வேட்டையாடச் சென்று வந்ததன் நினைவாக இது செய்யப்படுகிறது. பேட்டைதுள்ளல் என்பது மகிழ்ச்சியாக ஆடப்படும் நடனம், பேட்டை துள்ளலின்போது சாமி திந்தகத்தோம் ஐயப்ப திந்தக்கத்தோம் என்று பாடவேண்டும் காணிக்கைகளை உண்டியலில் போடவேண்டும்.

வாபர் சன்னதி....

இங்கும் பேட்டை துள்ள வேண்டும். இங்கு அவசியம் கற்பூரம் ஏற்றி வழிபட வேண்டும். இங்கிருந்து காளைக்கட்டி, பேரூர்தோடு, தாழ்வாரை, அழுதாநதி, அழுதைமேடு, கல்லிடும் குன்று வழியாக இஞ்சிப்பாதையை அடைய வேண்டும். கரிமலை, பகவதி, துர்க்காதேவி சன்னதி, கொச்சுகடுத்த சுவாமி சன்னதிகளில் சக்தி வழிபாடுகள் சரியாக செய்ய வேண்டும்.

பாம்பா நதி வழிபாடு....

பம்பை நதியில் பக்தியுடன் அய்யப்பனை நினைவில் கொண்டு நீராட வேண்டும். நீராடியபின், குருதட்சணை, அன்னதானம், பம்பை விளக்கு ஆகிய சக்திக்குரிய பூஜைகளை நடத்த வேண்டும். பம்பை நதிக்கரையில் பம்பா சத்யா எனும் அன்னதானம் செய்ய வேண்டும். காட்டிலுள்ள மூலிகை மரம், வேர் போன்றவற்றை விறகாகக் கொண்டு தயாரிக்கப்படும் அன்னத்தையும் மற்றும் உள்ள பதார்த்தங்களையும் உண்பதால் உடலில் உள்ள நோய்கள் குணமாகின்றன.

பம்பை-ஸ்ரீராமர் அனுமர் கோவில் வழிபாடு.....

பம்பை நதிக்கரையில் உள்ள கணபதி ஆலயத்தில் தேங்காய் உடைத்து வழிபட்டபின் ஸ்ரீராமர் கோவிலிலும், ஸ்ரீஹனுமார் கோவிலிலும் வழிபடவேண்டும்.

பந்தள ராஜவந்தனம்.....

நீலிமலை ஏறுவதற்கு முன்பாக நதிக்கரையில் வீற்றிருக்கும் பந்தளராஜா ஆசிரமத்திற்கு வந்து இறைவனை வழிபட்டபிறகே செல்ல வேண்டும்.

அப்பாச்சிக்குழி, இப்பாச்சிக்குழி.....

அய்யப்ப சுவாமியின் முக்கியமான பூதகணமாக கடுவரனால் துர்பூதங்களும், துர்வேதனங்களும் இங்கு அடங்கி வைக்கப்பட்டிருக்கின்றன. கன்னி சுவாமிகள் தங்கள் மூத்த குருசுவாமி ஆணைப்படி இந்த இடத்தில் அரிசிமாவு உருண்டையும் வெல்ல உருண்டைகளையும் இந்தக்குழியில் போட வேண்டும்.

சரஸ்குழி ஆல்துறை.....

கன்னிசுவாமிகள் குருதட்சணை வழங்கியபிறகு இந்த இடத்தில் சரக்கோல் குத்த வேண்டும்.

நெய் அபிஷேகம்.....

நெய் அபிஷேகம் ஸ்ரீ சன்னிதானத்தில் செய்ய வேண்டிய ஒன்றாகும். அய்யப்ப பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்துள்ள நெய் தேங்காய்களை உடைத்து அதை சுவாமி அபிஷேகத்திற்கு கொடுக்க வேண்டும். அபிஷேகம் செய்து கிடைக்கும் நெய்யை பிரசாதமாக உபயோகப்படுத்த வேண்டும்.

கணபதி சுவாமி சன்னதி.....

இங்கு ஒரு ஹோமகுண்டம் இருக்கும். இதில் நெய், தேங்காயின் ஒரு பங்கை போட வேண்டும்.

சண்முக சுவாமி சன்னதி...

இதுவும் மகா கணபதி சன்னிதானத்தைப்போல சன்னதிக்குள் இருக்கிறது. இங்கு பன்னீர், சந்தனம், ஊதுபத்தி, கற்பூரம் முதலியவற்றை ஏற்றி வழிபட வேண்டும். மாளிகைப்புறத்தம்மா அய்யப்ப சக்தி ஸ்வரூபிணி தேங்காய் உருட்டல் அந்த அம்மனுக்குரிய முக்கியமான வழிபாடு, இங்கு மஞ்சள், குங்குமம், வெற்றிலைப்பாக்கு முதலியவற்றை தேவியின் முன்வைக்க வேண்டும். இங்கு பிரசாதம் வாங்கிக் கொள்ளவும்.

கருத்த சுவாமிகள்.....

அவல், நெல்பொறி, வெல்லம், பழம், தேங்காய், வறுத்தபொடி முதலியவற்றை செலுத்தி வழிபாடு செய்ய வேண்டும்.

கருப்ப சுவாமிகள்....

இங்கு கற்கண்டு திராட்சைப்பழம், கற்பூரம் ஆகியவற்றை காணிக்கையாக வைத்து வழிபட வேண்டும்.

நாகராஜா, நாகஷியம்......

இங்கு மஞ்சள்பொடி, கற்பூரம் வைத்து வணங்க வேண்டும். பின் ஸர்ப்ப தோஷம் ஏற்படாமல் இருக்க ஸ்ர்ப்ப பாட்டு பாட வேண்டும்.

வாபர் சுவாமி.....

இந்த சன்னதியில் வாசனை திரவியங்களாக பன்னீர், ஊதுபத்தி, தேங்காய், நெல், மிளகு ஆகியவற்றை வைத்து வணங்க வேண்டும்.
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum