செய்திகள்... நிஜமும், நிழலும்
Page 1 of 1
செய்திகள்... நிஜமும், நிழலும்
விலைரூ.75
ஆசிரியர் : கோமல் ஆர்.கே.அன்பரசன்
வெளியீடு: கோமதி புத்தகாலயம்
பகுதி: பொது
ISBN எண்:
Rating
★ ★ ★ ★ ★
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
கோமதி புத்தகாலயம், 10, சூடியம்மன் தெரு, சைதாப்பேட்டை, சென்னை-15. (விலை: ரூ.75).
பத்திரிகைத் துறையில் நுழைய விரும்புபவர்களின் கையில் அவசியம் இருக்க வேண்டிய நூல் இது. "எது செய்தி' என்பதை உதாரணங்களுடன் ஆசிரியர் விளக்கியிருப்பது பாராட்டுக்குரியது. "மனிதனை நாய் கடித்தாலும் செய்தி தான். யாரை? நடிகர் ரஜினியை நாய் கடித்தால் அது செய்தி இல்லையா?' என்று விளக்கியிருப்பது அருமை. பத்திரிகை மற்றும் தொலைக்காட்சியில் செய்திகள் இடம் பெறும் முறையை அலசி ஆராய்ந்துள்ளார் நூலாசிரியர். ஒரு செய்தியாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் நூலில் தெளிவுபடுத்தியுள்ளார். "தனி மனித ஒழுக்கம் செய்தியாளருக்கு அவசியம். அப்போது தான் அவரது கருத்து சபை ஏறும்' என்று செய்தியாளருக்கு இருக்க வேண்டிய தகுதியை ஆசிரியர் வரையறுத்துள்ளார். நிருபர்களை தங்கள் வசம் வளைப்பதற்கு கையாளப்படும் "கவர்' கலாசாரத்தையும் ஆசிரியர் சுட்டிக்காட்டியிருப்பது சரியானது தான். தங்கள் பணியில் நிருபர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், அந்தப் பிரச்னைகளை தீர்க்கும் வழிமுறைகள் ஆகியவற்றையும் ஆசிரியர் பிட்டு வைத்துள்ளார். "தமிழில் முதன் முதலில் ஆப்செட் முறையை பயன்படுத்திய நாளிதழ் தினமலர்,' "இந்தியாவின் முதல் பெண்கள் இதழ் இந்தியன் லேடீஸ். இது சென்னையில் இருந்து வெளிவந்தது' என்று பல்வேறு குறிப்புகளை தொகுத்து வழங்கியுள்ளார். சொல்லும் கருத்து சரியாக மக்களிடம் போய் சேர வேண்டும் என்பதே செய்தியின் நோக்கம் என்று கூறியிருப்பது போல், இந்த நூலைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் பத்திரிகை உலகம் பற்றி சரியான தகவல் போய்ச் சேரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» நிழலும் நிஜமும்
» முண்டக உபநிஷதம்-நிழலும் நிஜமும்
» முண்டக உபநிஷதம்-நிழலும் நிஜமும்
» முண்டக உபநிஷதம்(நிழலும் நிஜமும்)
» செய்திகள் செய்திகள்
» முண்டக உபநிஷதம்-நிழலும் நிஜமும்
» முண்டக உபநிஷதம்-நிழலும் நிஜமும்
» முண்டக உபநிஷதம்(நிழலும் நிஜமும்)
» செய்திகள் செய்திகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum