அதிமுக கூட்டணியில் விஜய் இயக்கத்துக்கு 3 இடங்கள்; எஸ்ஏ சந்திரசேகரன் புதுக்கோட்டையில் போட்டி?
Page 1 of 1

அ.தி.மு.க. கூட்டணியில் நடிகர் விஜய்யின் ரசிகர் மன்றத்தினருக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
வரும் சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கமும் போட்டியிடத் தயாராகிவிட்டது. ஏற்கெனவே விஜய்யின் மன்றத்தினர் தமிழகம் முழுவதும் அதிமுகவுக்கு ஆதரவாக களமிறங்கிவிட்டனர்.
இன்னொரு பக்கம், வெறும் ஆதரவு என்ற அளவில் இல்லாமல், விஜய்யின் செல்வாக்கை ஆதாயமாக மாற்றுவதில் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகரன் தீவிரமாக உள்ளார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை ஏற்கெனவே மூன்று முறை சந்தித்துப் பேசியுள்ளார். அ.தி.மு.க. கூட்டணியில் விஜய்யின் மக்கள் இயக்கம் சேர்ந்து போட்டியிடுவது குறித்தும் விவாதித்துள்ளார்.
ரசிகர் மன்ற பொறுப்பாளர்களை தேர்தலில் இறக்கி விடும் முடிவில் விஜய் இருக்கிறார். இதற்காக ஜெயலலிதாவிடம் 15 தொகுதிகள் அடங்கிய பட்டியலை முன்பே கொடுத்து அதில் 10 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டிருந்தார்.
இப்போது அதில் 3 தொகுதிகளை விஜய் இயக்கத்துக்கு ஒதுக்க ஜெயலலிதா சம்மதித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. விஜய்யின் மக்கள் இயக்கம் தங்களுடன் இணைந்து போட்டியிடுவதை அதிமுக மூத்த நிர்வாகி ஒருவரும் உறுதிப்படுத்தினார். இது சம்பந்தமாக பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
ஆனால் விஜய் இந்த முறை போட்டியிடமாட்டாராம். அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட விரும்புகிறாராம். விஜய்யை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தவும் முயற்சிகள் நடக்கின்றன. சமீபத்தில் நாகப்பட்டினத்தில் தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படை தாக்குவதை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றபோது ஏராளமான ரசிகர்கள் கொட்டும் மழையிலும் திரண்டிருந்தது நினைவிருக்கலாம்.
இது போன்று முக்கிய நகரங்களில் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து தேர்தல் பிரசாரம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுப் பயணத்துக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அதிமுகவுக்கு விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு ஏன்? – எஸ்ஏ சந்திரசேகரன் விளக்கம்
» விஜய் ஆதரவு மட்டும்தான்; அதிமுகவுக்கு பிரச்சாரம் இல்லை! – எஸ்ஏ சந்திரசேகரன்
» தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: எஸ்.ஏ.சந்திரசேகரன், கேயார் போட்டி

» விஜய் அரசியலில் குதிப்பது தவிர்க்க முடியாதது! – எஸ்ஏ.சந்திரசேகர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum