தேர்தல் களத்தில் ஜெயம் ரவி, பரத்
Page 1 of 1
தேர்தல் களத்தில் ஜெயம் ரவி, பரத்
ஜெயம் ரவி, பரத் உள்ளிட்ட நட்சத்திரங்களும் தேர்தல் களத்தில் குதிக்கிறார்கள். சட்டசபை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் கட்சிக்கு ஓட்டு வேட்டையாட சினிமா நட்சத்திரங்கள் பலரையும் விலைபேசி வருகிறார்கள்.
கடந்த தேர்தலில் தமிழக அரசியல் பற்றி எதுவுமே தெரியாத சிம்ரன் உள்ளிட்ட நடிகைகள் கூட பிரசாரத்தில் ஈடுபட்டு ஓட்டு வேட்டையாடினார்கள். இந்த தேர்தலிலும் பல நட்சத்திரங்கள் ஓட்டு வேட்டையாட இருக்கிறார்கள். முன்னணி நடிகரான விஜய் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக குரல் கொடுக்கக்கூடும் என்ற செய்திகளும் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் நடிகர்கள் ஜெயம்ரவி, பரத் உள்ளிட்டோரும் தேர்தல் களத்தில் குதிக்கவிருக்கிறார்கள். இவர்கள் களமிறங்குவது, அரசியல் கட்சிகளுக்காக அல்ல…. தேர்தல் ஆணையத்துக்காக! ஆம். ஓட்டு போடுவதன் அவசியத்தை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் சார்பில் ஒரு குறும்படம் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் நடிகர்கள் ஜெயம் ரவி, பரத், எஸ்.பி.பி.சரண், நடிகை ரோஹினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஒரு ஓட்டின் மதிப்பு என்ன? என்பதை வாக்காளர்களுக்கு உணர்த்தும் வகையில் குறும்படம் தயாரிக்கப்படுகிறது. ஒரு ஓட்டு எத்தனையோ மாற்றங்களை உருவாக்கியிருக்கிறது. அப்படிப்பட்ட ஓட்டை பதிவு செய்யாமல் வீணடிக்கக் கூடாது. வாக்களிப்பது வாக்காளரின் கடமை… என்பன போன்ற கருத்துக்கள் குறும்படத்தில் இடம்பெறுகின்றன. விரைவில் இந்த குறும்படம் தியேட்டர்கள் மற்றும் டி.வி.,க்களில் ஒளிபரப்பாகும் என தெரிகிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» புதிய களத்தில் பரதேசி படப்பிடிப்பு
» சகோதரரை களத்தில் இறக்குகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்
» கிளாமர் களத்தில் குதிக்கும் பாவனா
» தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தது ஏன் என்று விளக்கம் கேட்டு கன்னட நடிகை குத்து ரம்யாவுக்கு கர்நாடக மாநில இளைஞர் காங்கிரஸ் தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். குத்து ரம்யாவின் தாத்தா எஸ்.எம்.கிருஷ்ணா. காங்கிரஸ் கட்சியி
» மீண்டும் ஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum