பெண்கள் தங்க நகை அணியும் போது கவனம் தேவை
Page 1 of 1
பெண்கள் தங்க நகை அணியும் போது கவனம் தேவை
தங்க நகைகளை அணியும் போது ஓரிடத்தில் அமர்ந்து அணியவும். கம்மல், மூக்குத்தி போன்றவை அணியும் போது பேசி கொண்டே அவசரமாக அணிய வேண்டாம். அப்படி அணிபவர்கள் அது பத்து முறை தொலைந்து போய் விழுந்து விழுந்து பதற்றத்துடன் தேட வேண்டி வரும். விஷேசங்களுக்கு செல்லும் போது நகைகளை பெட்டியோடு கொண்டு செல்ல வேண்டாம்.
அந்த காலத்து பாட்டிகளின் சுருக்கு பை (அ) துணி பர்ஸ்களில் வைத்து கொண்டு செல்லவும். இதனால் நகைபெட்டி என்று அந்த பெரிய பேக்களை பாதுகாக்க தேவையில்லை, கைக்கு அடக்கமா ஹேண்ட் பேக்கிலேயே வைத்து கொள்ளலாம். வெளியூருக்கு சென்று அணியும் நகைகளை, அதாவது கல்யாண சத்திரத்தில் போய் தங்கி அங்கு அணிய வேண்டி வந்தால்.
பெரிய பார்சலாக தூக்கி கொண்டு போகாமல் சின்ன இரண்டு முன்று பர்ஸ்கள் வைத்து கொள்ளவும். அதில் கம்மல், மோதிரம், மாட்டல் ஒரு பர்ஸிலும், வளையல் ஒரு பர்ஸிலும், பெரிய ஹார்கள், மாலைகள் ஒரு பர்ஸிலும் வைத்து கொண்டால் எடுப்பது சுலபம் இலலை என்றால் ஒரு சிறிய, கம்மலோ (அ) மோதிரமோ காணமல் போக வாய்ப்பிருக்கு.
கவரிங் நகைகள் செண்ட் போன்றவை தனித்தனியாக வைக்கவும். ஆகையால் பிரேஸ்லேட் அணியும் போது சின்ன கோல்ட் கலர் சேஃப்டி பின்னை கொக்கி வளையத்தில் மாட்டி கொண்டால் டென்ஷன் இல்லாமல் இருக்காலாம்.
கல்யாண பெண்களுக்கு கழுத்தில் நிறைய செயின் போடுபவர்கள் கூடவே மெல்லிய செயினும் போட்டு இருப்பார்கள். அதுவும் தொலைந்து போக சான்ஸ் இருக்கு அதற்கும் சேஃப்டி பின் தான் எல்லா செயின் வளையங்களிலும் சேர்த்தாற் போல் சின்ன கோல்ட் சேஃப்டி பின்னை குத்தி கொள்ளவும்
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தலை சீவும் போது கவனம் தேவை
» செருப்பு வாங்கும் போது கவனம் தேவை
» செருப்பு வாங்கும் போது கவனம் தேவை
» கண் வலி கவனம் தேவை
» கண்வலியா கவனம் தேவை.
» செருப்பு வாங்கும் போது கவனம் தேவை
» செருப்பு வாங்கும் போது கவனம் தேவை
» கண் வலி கவனம் தேவை
» கண்வலியா கவனம் தேவை.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum