திருமணத்துக்கு பின்பு `காதல்'
Page 1 of 1
திருமணத்துக்கு பின்பு `காதல்'
`காதல் முடியும் இடம் கல்யாணம்' என்ற எண்ணம் இன்றைய தம்பதிகளிடம் இரண்டறக் கலந்துள்ளது. அதனால் திருமணம் முடிந்ததும் தங்களுக்குள் இருக்கும் காதலை கைவிட்டு விடுகிறார்கள். காதலுடன் நெருங்கும் கணவரை, குடும்பப் பொறுப்பு களைக் காட்டி விலக்கும் பெண்களும் இருக்கிறார்கள்.
காதல் என்றால் திருமணத்திற்கு முந்தைய சமாச்சாரம் என்பதே அவர்கள் கருத்தாக இருக்கிறது. அந்தஸ்து ஒன்றே குறியாக நினைக்கும் இன்றைய தம்பதிகள் ஒருவரை ஒருவர் நேசிக்கவும் நேரமில்லாமல் ஓயாத ஓட்டத்தில் இருக்கிறார்கள். அதற்குள் அலுத்துவிடும் வாழ்வு அவர்களை விவாகரத்தில் தள்ளி திண்டாட வைத்துவிடுகிறது.
`தம்பதிகள் காதலிக்கவும் கொஞ்சம் நேரம் ஒதுக்கினால் மணமுறிவுகள் மறைந்துவிடும்' என்பதுதான் உளவியலாளர்களின் கணிப்பு. வாரத்தில் ஒரு நாளாவது உங்களுக்கென்று கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள். ஒரு இனிமையான சூழ்நிலையில் அமர்ந்து மனம்விட்டு பேசுங்கள். வாய்விட்டு சிரியுங்கள். இளமை திரும்பி இருப்பதாக நினைத்துக் கொண்டாடுங்கள். அது உங்களை நீண்ட நாள் மகிழ்ச்சியாக வாழ வைக்கும்.
எந்தப் பிரச்சினைக்கும் மனம்விட்டு பேசிக் கொள்வதைவிட நல்ல மருந்து வேறெதுவு மில்லை. இதனால் பல தவறான அபிப்பிராயங்களை தவிர்க்கலாம், பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். இது ஒரு எளிமையான வழிமுறை. மனதில் இருக்கும் பயம், சந்தேகம், வருத்தம், கோபம், ஆதங்கம் எல்லாவற்றையும் பேசி முடிவுக்கு வாருங்கள்.
வேண்டாத விவாதங்களை நிறுத்திக் கொள்ளுங்கள். இணைந்த வாழ்க்கை என்றான பிறகு ஒருவரைப் பற்றி ஒருவர் சதா குறை கூறிக் கொண்டிருப்பதை நிறுத்துங்கள். மற்றவர்களிடம் குறைகளை முறையிடாதீர்கள். ஒருவர் மற்றவர்க்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைப் புரிய வையுங்கள்.
உங்கள் நேசத்தின் பரிமாணம் மற்றவருக்கு புரியும்போது குறைகள் மறைந்துவிடும். தன் வார்த்தையை மற்றவர் மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் நீங்கள், தனது வார்த்தைகள் நியாயமானதுதானா? என்பதையும் சிந்தியுங்கள். உத்தரவு பிறப்பித்தல், வற்புறுத்துதல், வழி நடத்துதல் எல்லாம் மற்றவர்களை அடிமைப்படுத்தும் விஷயங்கள்.
இவை அசவுகரியங்களைத்தான் உண்டாக்கும். இயற்கை சூழலில் உங்களை இணைத்துக் கொள்ளும்போது மனம் லேசாகும். இந்த அகண்ட பிரபஞ்சத்தில் நாம் ஒரு சிறு துரும்பு என்ற எண்ணம் வரும்போது பிரச்சினைகள் மறைந்துவிடும். குறிப்பாக கடற்கரைக்கு அப்படி ஒரு சக்தி இருப்பதாக உளவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்.
நம் ஆன்மாவை பரவசப்படுத்தும் சக்தி கடற்கரைக்கு உண்டு என்கிறது உபந்நியாசங்கள். எனவே தூய தென்றல் தவழும் கடற்கரையில் அமர்ந்து மனம்விட்டு பேசி மகிழ்ச்சியை நிரப்பிக்கொள்ளுங்கள். வாழ்க்கை என்பது வியாபாரமாகவே இருக்கட்டும். காதலை விலையாக கொடுத்து மகிழ்ச்சியை மட்டும் வாங்குங்கள்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» உன்னை பார்த்த பின்பு நான்… பாடல் வரிகள் மற்றும் வீடியோ
» நயன்தாராவின் காதல் கதையா எங்கேயும் காதல்? – பிரபுதேவா பதில்
» என் காதல் உண்மையானது! காதல் முறிவு குறித்து நயன்தாரா பேட்டி!!
» திருமணத்துக்கு தயராகும் விஷால்!
» திருமணத்துக்கு முன் காதலா?
» நயன்தாராவின் காதல் கதையா எங்கேயும் காதல்? – பிரபுதேவா பதில்
» என் காதல் உண்மையானது! காதல் முறிவு குறித்து நயன்தாரா பேட்டி!!
» திருமணத்துக்கு தயராகும் விஷால்!
» திருமணத்துக்கு முன் காதலா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum