அரசியல் இல்லை என்றாலும் குத்துறாங்களே! எஸ்.ஏ.சந்திரசேகர்
Page 1 of 1

இப்போதைக்கு அரசியல் இல்லை என்று சொல்லியும் நம்பை ஏன் குத்துகிறார்கள் என்று விஜய் சிந்திப்பதாக எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார். வரும் சட்டசபை தேர்தலில் விஜய் ஆதரவு யாருக்கு? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் இதுபற்றி விஜய்யின் அப்பா டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்துள்ள பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் தனது பேட்டியில், விஜய் எந்த மனநிலையில் இருக்கிறார் என்று ஒவ்வொரு ரசிகனுக்கும் தெரியும். பொது மக்களுக்கே விஜயின் மனநிலை புரிந்து இருக்கிறது. அவர் ஒரு அமைதியான போராளி. அவருக்கு எப்போது என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும். எல்லா விஷயங்களையும் புரிந்து வைத்திருக்கிறார். அனைத்து விதத்திலும் செல்வாக்கில் இருக்கும் நமக்கே இவ்வளவு பிரச்னையா? என்பதுதான் அவர் ஆதங்கமும் கோபமும். இப்போதைக்கு அரசியல் இல்லை என்று சொல்லியும் நம்மை ஏன் குத்துகிறார்கள்? என சிந்திக்கிறார். அவர் பலவீனமானவர் அல்ல, பலமானவர் என்பது இதில் இருந்தே புரிகிறது. கண்டிப்பாக விஜய் யாருக்கு ஆதரவாகவும் தேர்தல் பிரசாரம் செய்யமாட்டார். ஆனால் விஜய் ரசிகர்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என அவர்களுக்கே தெரியும், என்று கூறியுள்ளார்.
சட்டப்படி குற்றம் படத்துக்கு எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து கூறுகையில், என் படத்தை எதற்காக தடுக்கப் பார்க்கிறார்கள் எனத் தெரியவில்லை. தான் சார்ந்த சமுதாயத்தின் மீது கோபம் கொண்ட இளைஞர்கள் ஒன்று கூடி போராட ஆரம்பிக்கும் போது வெடிக்கும் புரட்சிதான் இந்தப் படம். இது யாருக்கும் எதிரான படம் என்பதை விட, சமூகத்துக்கு தேவையான படம் என்பதே பொருத்தமாக இருக்கும். படத்தை பார்த்த எல்லோருக்கும், குறிப்பாக விநியோகஸ்தர்களுக்கும் திருப்தி. ஆனால் வாங்கத்தான் யாரும் வரவில்லை. இந்தப் படத்தை வாங்கினால், தனிப்பட்ட முறையில் விநியோகஸ்தர்கள் மிரட்டப்பட்டதாக தெரிந்து கொண்டேன். அதனால் இப்போது நானே ரிலீஸ் செய்கிறேன். இதே வடபழனியில் பிளாட்பாரத்தில் முன்னொரு காலத்தில் படுத்து கிடந்தவன் நான். அதனால் பணத்தைப் பற்றி எனக்கு கவலையில்லை, என்று கூறியிருக்கிறார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» முஸ்லிம்களுக்காக ஒரு தலைவர் இல்லவே இல்லை... என்றாலும் அவர்களுக்காக நான் நிற்கிறேன்...! - ரணில்
» மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளில் 10 பேரில் ஒருவர் தவறான மருத்துவச் சிகிச்சைகளால் உயிரிழக்கின்றனர் என்று உலகச் சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதன் விளைவுகள் குறித்த தரவுகள் இப்போதைக்கு இல்லை என்றாலும், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட
» அரசியல் பிரவேசம் குறித்து இப்போது பேசும் சூழ்நிலை இல்லை-ரஜினிகாந்த்
» அனுஷ்காவும் இல்லை; தமன்னாவும் இல்லை : ராகவா லாரன்ஸ்!!
» எஸ் ஏ சந்திரசேகர் மீது கேயார் போலீசில் புகார்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum