அருகம்புல் மாலை ஏன்?
Page 1 of 1
அருகம்புல் மாலை ஏன்?
அனலாசுரன் என்ற அசுரன் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தான். தன்னை எதிர்ப்பவர்களை அனலாய் மாற்றித் தகித்து விடுவான். இவனை பிரம்மாவாலும் தேவேந்திரனாலும் அடக்க முடியவில்லை. அவர்கள் சிவ பார்வதியைச் சந்தித்து முறையிட்டனர். சிவனும் விநாயகரை அழைத்து அந்த அரக்கனை அழித்து வரும்படி கட்டளையிட்டார்.
விநாயகரும் பூத கணங்களுடன் போருக்குச் சென்றார். அங்கு சென்றதும் அனலாசுரன் பூதகணங்களை எரித்துச் சாம்பலாக்கினான். விநாயகர் அனலாசுரனுடன் மோதினார். ஆனால் அவனை வெற்றி கொள்ள முடியவில்லை. கோபத்தில் அவனை விநாயகர் அப்படியே விழுங்கி விட்டார்.
வயிற்றுக்குள் சென்ற அனலாசுரன் அதை வெப்பமடையச் செய்தான். விநாயகருக்கு அந்த வெப்பத்தைச் தாங்க முடியவில்லை. அவருக்கு குடம் குடமாக கங்கை நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை. இந்நிலையில் ஒரு முனிவர் அருகம்புல்லைக் கொண்டு வந்து விநாயகரின் தலை மேல் வைத்தார்.
அவரது எரிச்சல் அடங்கியது. அனலாசுரனும் வயிற்றுக்குள் ஜீரணமாகி விட்டான். அன்று முதல் தன்னை அருகம்புல் கொண்டு அர்ச்சிக்க வேண்டுமென விநாயகர் கட்டளையிட்டார். இப்படித்தான் விநாயகருக்கு அருகம்புல் சாற்றும் பழக்கம் ஏற்பட்டது.
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» அருகம்புல் அருகம்புல்
» அருகம்புல்
» அருகம்புல் புட்டு
» அருகம்புல் கஷாயம்
» அருகம்புல் ஜூஸ் அருகம்புல் ஜூஸ்
» அருகம்புல்
» அருகம்புல் புட்டு
» அருகம்புல் கஷாயம்
» அருகம்புல் ஜூஸ் அருகம்புல் ஜூஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum