தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

யாரையும் காதலிக்கவில்லை – மோனிகா

Go down

 யாரையும் காதலிக்கவில்லை – மோனிகா Empty யாரையும் காதலிக்கவில்லை – மோனிகா

Post  ishwarya Fri Apr 19, 2013 2:39 pm

முத்துக்கு முத்தாக, நஞ்சுபுரம் படங்கள் ரிலீசான சந்தோஷத்தில் இருக்கிறார் மோனிகா. இரு படங்களிலும் இவர் நடிப்புக்கு ரசிகர்களிடம் இருந்து பாராட்டுகள் குவிகிறதாம். மோனிகா அளித்த பேட்டி வருமாறு:-

முத்துக்கு முத்தாக படம் சூட்டிங்கிலேயே படக் குழுவினர் என் நடிப்பை பாராட்டினர். காதல் நிறை வேறாமல் தவிக்கிற உணர்வுகளை வெளிக்காட்டுகிற என் நடிப்பு கண் கலக்க வைத்ததாக சொன்னார்கள். நிறைய ரசிகர்கள் வெப் சைட்ல ஈ.மெயில் அட்ரஸ் கண்டுபிடிச்சி நிறை மெயில் அனுப்புறாங்க.

முத்துக்கு முத்தாக, நஞ்சு புரம் படங்களில் சிறப்பாக நடித்துள்ளதாக மெயில், போன் மூலம் ஊக்கு விக்கிறாங்க. தனித்துவமான கதாநாயகி அடையாளம் இப்போது தான் கிடைத்துள்ளது என நினைக்கிறேன். அழகிக்கு பிறகு எனக்கு தனி அடையாளம் தர்றமாதிரி படங்கள் வரவில்லை.

இப்போது ரிலீசாகியுள்ள இரு படங்களும் அதை நிறைவேற்றயுள்ளன. சினிமாவில் குழந்தை நட்சத்திரமாகத்தான் அறி முகமானேன். பிறகு சிறு சிறு துணை பாத்திரங்களில் வந்தேன். இப்போது தான் முழு நடிகையாக மாறியுள்ளேன். ஒரு படத்தில் கவர்ச்சியாக நடித்தேன்.

கதைக்கு தேவை என இயக்குனர் வற்புறுத்தியதால் அப்படி நடித்தேன். அதன் பிறகு யார் கேட்டாலும் கவர்ச்சியாக நடிப்பது இல்லை என மறுத்து வருகிறேன். அழகா காட்டினால் அதுவே கிளாமர்தான். அருவறுக்கிற முகம் சுழிக்கிற மாதிரி கவர்ச்சி வேடங்களில் நடிக்க மாட்டேன்.

தற்போது நான் நடித்த அகராதி, வர்ணம் படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. இவை தவிர தமிழில் நரன், கன்னடத்தில் ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ் படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறேன். யாரையும் காதலிக்கவில்லை. அதற்கான நேரமும் இல்லை. முழு கவனம் சினிமாவில் தான்.

இவ்வாறு மோனிகா கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum