தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

உலக கிரிக்கெட் போட்டி முடிவதால் 10 படங்கள் ரிலீஸ்

Go down

உலக கிரிக்கெட் போட்டி முடிவதால் 10 படங்கள் ரிலீஸ் Empty உலக கிரிக்கெட் போட்டி முடிவதால் 10 படங்கள் ரிலீஸ்

Post  ishwarya Fri Apr 19, 2013 2:38 pm

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று முடிவடைகிறது. அரை இறுதி போட்டியில் பாகிஸ்தானுடன் இந்திய அணி மோதியதாலும், இன்றைய இறுதி போட்டியில் இலங்கையுடன் இந்தியா மோதுவதாலும் ரசிகர்கள் கிரிக்கெட் ஜுரத்தில் சிக்கிக்கிடக்கின்றனர். இதனால் புதுப்படங்கள் ரிலீஸ் நிறுத்தப்பட்டது.

இதுபற்றி தயாரிப்பாளர் ஒருவர் கூறும்போது:-

பிப்ரவரி முதல் மார்ச் வரை திரையுலகம் இருண்டு கிடந்தது. ரிலீசான சில படங்களும் உலகக்கோப்பை கிரிக்கெட்டால் ஓடவில்லை. வசூலும் பாதியாக குறைந்துள்ளது. இன்றுடன் உலகக் கோப்பை கிரிக்கெட் முடிவதால் 10 புதுப்படங்கள் ரிலீசுக்கு தயாராகின்றன. தனுஷ், ஹன்சிகா மோத் வானி ஜோடியாக நடிக்க ‘மாப்பிள்ளை’ படம் வருகிற 8-ந் தேதி ரிலீசாகிறது.

இது 1989-ல் வெளியான ரஜினியின் மாப்பிள்ளை படத்தின் ரீமேக் ஆகும். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள ‘கோ’ படமும், முதல்-அமைச்சர் கருணாநிதி வசனத்தில் பிரசாந்த் நடித்துள்ள ‘பொன்னர்-சங்கர்’ படமும் ஏப்ரல் 15-ல் ரிலீசாகிறது. சுசீந்திரன் இயக்கிய ‘அழகர்சாமியின் குதிரை’ மற்றும் கண்டேன் போன்ற படங்கள் வருகிற 27-ந் தேதி திரைக்கு வருகின்றன.

பிரபுதேவா இயக்கத்தில் ஜெயம் ரவி – ஹன்சிகா மோத்வானி ஜோடியாக நடிக்க ‘எங்கேயும் காதல்’ படம் வருகிற 29-ந் தேதியும், சிம்பு, பரத், அனுஷ்கா ஆகியோர் நடித்துள்ள ‘வானம்’ படம் மே 6-ந் தேதியும் ரிலீசாகின்றன. 180 என்ற பெயரில் தயாராகியுள்ள படம் மே 13-ல் வருகிறது. பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால் இணைந்து நடித்துள்ள ‘அவன் இவன்’ படம் மே 20-ல் ரிலீசாகிறது. விக்ரம் நடிக்கும் ‘தெய்வ திருமகன்’ படம் மே 27-ல் திரைக்கு வருகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சூர்யா, தனுஷ், ஆர்யா, அர்ஜுன் படங்கள் போட்டி: தீபாவளிக்கு 6 படங்கள் ரிலீஸ்
» ஒரே நாளில் ரிலீஸ் விஜய், சூர்யா படங்கள் போட்டி.
» பொங்கல் ரிலீஸ் படங்கள் – காவலன், ஆடுகளம் போட்டா போட்டி
» நட்சத்திர கிரிக்கெட் போட்டி: தமிழ் சினிமா அணி அறிவிப்பு!
» விஸ்வரூபம் படத்தை திரையிட தியேட்டர் அதிபர்கள் போட்டி: சென்னையில் 30 திரையரங்கில் ரிலீஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum