தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மும்பையில் நடக்கிறது: நயன்தாரா-பிரபுதேவா திருமண ஏற்பாடு

Go down

மும்பையில் நடக்கிறது: நயன்தாரா-பிரபுதேவா திருமண ஏற்பாடு Empty மும்பையில் நடக்கிறது: நயன்தாரா-பிரபுதேவா திருமண ஏற்பாடு

Post  ishwarya Fri Apr 19, 2013 2:30 pm

நயன்தாராவும், பிரபுதேவாவும் திருமணத்துக்கு தயாராகிறார்கள். ஜெயம்ரவி, ஹன்சிகா மோட்வானி நடிக்கும் எங்கேயும் காதல் படத்தை பிரபுதேவா இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இம்மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன.

இப்படம் வெளியானதும் திருமண ஏற்பாடுகள் முழு வீச்சில் நடக்க உள்ளன. திருமணத்தை மும்பையில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. நயன்தாரா, பிரபுதேவா காதலுக்கு உதவிய பிரகாஷ்ராஜ் தனது இரண்டாம் திருமணத்தை மும்பையில் தான் நடத்தினார்.

பிரிபுதேவாவும் மனைவி ரம்லத்தும் சென்னை குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளனர். இருவரும் ஒன்று சேர்ந்து இந்த மனுவை தாக்கல் செய்திருப்பதால் விவாகரத்து விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரம்லத்துக்கு பலகோடி மதிப்புள்ள சொத்துக்களை பிரபுதேவா எழுதி கொடுத்துள்ளார். நயன்தாராவை எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள் என்று பிரபுதேவாவிடம் கேட்ட போது சிரித்தபடி பதில் சொல்லாமல் நழுவினார். எனது பிறந்த நாளை பெற்றோர் மற்றும் எனது அன்புக்குரிய ஒருவருடன் சேர்ந்து கொண்டாடப்போகிறேன் என்று கூறினார். சந்தோஷ் சிவம் இயக்கிய உருமி படத்தில் பிரபுதேவா நடித்து முடித்துள்ளார். விஷாலை வைத்து பெயரிடப்படாத படமொன்றையும் இயக்கி வருகிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum