தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அறுகோண சக்கரம்

Go down

 அறுகோண சக்கரம்  Empty அறுகோண சக்கரம்

Post  gandhimathi Mon Jan 21, 2013 1:11 pm

முருக வழிபாட்டில் அறுகோணச் சக்கரம் முக்கியமானது. தியானம் செய்கையில் மன ஒருமைப்பாட்டுக்கு ஓர் ஆதரமாக அறுகோணச் சக்கரம் பயன்படுத்தப்படுகின்றது. அச்சக்கரமானது காகிதத்தில் வரையப்பட்டு கண்ணாடிக்குள் அடைக்கப்பட்டோ அல்லது மரம் உலோகம் ஆகியவற்றில் தோண்டப்பட்டோ பயன்படுத்தப்படுகின்றது.

அறுகோணச் சக்கரத்தில் இரு சம அளவிலான சமபக்க முக்கோணங்கள் ஒன்றன்மேல் ஒன்றாக நேர் எதிர்த்திசைகளில் படிந்துள்ளவாறு அமைக்கப்பட்டிருக்கும். முக்கோணங்களுக்கு நடுவில் அமைந்துள்ள மையப்புள்ளியானது உயிர்ச்சக்தியெனக் கொள்ளப்படுகின்றது. ஈர்ப்புச் சக்தியான அப்புள்ளி கந்தன் எனப்படுகின்றது.

இவற்றைச் சுற்றி இரு தனிப்பட்ட வட்ட வளையங்கள் வரையப்பட்டு உள்வட்டத்தில் ஆறுதாமரை இதழ்களும், வெளிவட்டத்தில் 12 தாமரை இதழ்களும் வரையப்பட்டிருக்கும். அவற்றைச் சுற்றி பூபுரம் எனப்படும் மூன்று ஒத்த அளவுடைய இடைவெளியுடன் மூன்று சதுரங்கள் நான்கு பக்கங்களிலும் வாயில்களுடன் வரையப்பட்டிருக்கும்.

இவை அனைத்தும் உற்பத்தி அல்லது ஆக்கல் தொழில் தங்கு தடையின்றித் தொடர்ச்சியாக நடைபெறுவதை நினைவூட்டுகின்றன. யோகிகள், சாதகர்கள் ஆகியோர் ஆழ்ந்த தியானத்தின்போது இச்சக்கரங்கள் காட்டும் முழுமைத் தன்மையுடன் தம்மை இணைத்துக் கொண்டு செயல்பட்டுப் பயன்பெறுவர்.

பூபுரம் என்ற வெளிச்சுற்றுச் சதுரச் சுவர்களில் இருந்து தொடங்கி படிப்படியாக உள்ளடங்கி மனத்தைக் கட்டுப்படுத்தி மைய ஈர்ப்புப் புள்ளியுடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளும் மனப்பக்குவம் ஏற்பட்டு விட்டால் தாம் விரும்பிய காரியத்தை எளிதில் நிறைவேற்றி விடலாம் என்ற நம்பிக்கை நிலவுகின்றது.

எனவே இச்சக்கரத்தினைப் பயன்படுத்தித் தியானம் மூலம் உடலியக்கத்திற்கு காரணமாக விளங்கும் உள்மனத்தைக் கட்டுப்படுத்தி உயர்நிலையை பெறலாம்.

சரவணபவ......

முருகனுக்கு " சரவணபவ " என்ற ஆறெழுத்து மந்திரம் பயன்படுத்தப்படுகின்றது. அது ஆகர்ஷணம், மாரணம், மோகனம், தம்பனம், உச்சாடனம், வசியம் எனப்படும்.
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum