ராமச்சந்திரா மருத்துவமனையில் ரஜினி!!
Page 1 of 1
ராமச்சந்திரா மருத்துவமனையில் ரஜினி!!
வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த், சிகிச்சைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
வைரஸ் காய்ச்சல், நீர்ச் சத்து குறைவால் மே 4-ம் தேதி சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ரஜினிகாந்த். அவருக்கு முழு ஓய்வு தேவைப்பட்டதால் மருத்துவமனையிலேயே தங்கியிருந்தார். பார்வையாளர்களை தவிர்த்து ஓய்வில் இருந்த அவர், கடந்த செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினார்.
நேற்று அவரது உடல் நிலை குறித்து அவ்வப்போது வதந்திகள் வந்த வண்ணம் இருந்தன. உடலில் இன்னும் சீரான முன்னேற்றம் ஏற்படாததால், அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை எடுக்கப் போகிறார் என்றும் கூறப்பட்டது. இதனை அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா மறுத்திருந்தார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை அவரது உடல் நிலை குறித்து திடுக்கிட வைக்கும் வதந்திகள் பரவியது. இதனால் ரசிகர்கள், பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் தொலைபேசியில் ரஜினியின் உடல் நிலைப் பற்றி பேசியவாறு இருந்தனர்.
இதனால், லதா ரஜினிகாந்த், நேற்று செய்தியாளர்களிடம், ரஜினி நலமாக இருக்கிறார் என்று தெரிவித்தார். இந்நிலையில், இன்று அவர் முழு உடல் பரிசோதனைக்காக, சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். பரிசோதனை முடிவுகளைப் பொறுத்து, அவர் அங்கு அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சை பெறுவாரா அல்லது உடனடியாக வீடு திரும்புவாரா என்பது தெரியவரும்.
இதுகுறித்து அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் விசாரித்த போது, ரஜினி வழக்கமான பரிசோதனைக்காக ராமச்சந்திரா மருத்துவமனை சென்றுள்ளார், என்றனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மருத்துவமனையில் விஜயகுமாரை சந்தித்த ரஜினி!
» மீண்டும் உடல்நிலை பாதிப்பு – மீண்டும் மருத்துவமனையில் ரஜினி!
» ரஜினி உடல்நலம் குறித்துக் கவலை வேண்டாம் – ரஜினி மகள் ஐஸ்வர்யா
» ‘ரஜினி உங்களைச் சந்திப்பார்… ரசிகர்கள் அமைதி காக்க வேண்டும்!’ – லதா ரஜினி
» ஷாரூக்கான் – ரஜினி இணையும் முதல் படம் – கோடிக்கணக்கான ரஜினி ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum