ஆபத்து வந்தால் அபயம் தரும் ஸ்ரீ நரசிம்மர்
Page 1 of 1
ஆபத்து வந்தால் அபயம் தரும் ஸ்ரீ நரசிம்மர்
அவசர உலகில் பரபரப்பான வாழ்க்கையில் மனிதர்கள் கடவுளை நினைப்பது சாத்தியமில்லாமல் போய்விட்டது. சந்தோஷத்திலோ மகிழ்ச்சியிலோ கடவுளை நினைக்காமல், தனக்கு துயரம், சோகம், ஆபத்து வந்தால் மட்டும், தெய்வங்களிடம் முறையிடுவது மனிதர்களின் வழக்கம் தானே! துயரத்திலும் ஆபத்து வேளைகளிலும் மட்டுமே தன்னைக் காப்பது ஒரே சக்தி அது கடவுள் சக்தியே என்பதில் எந்த ஒரு மனிதனும் முரண்படுவதில்லை.
ஆபத்து வேளையில் தான் கண்கண்ட தெய்வத்தை நம்புகிறான். கடவுளே காப்பாத்து! ஆண்டவா அபயம் கொடு! இறைவா நீயே கதி! என்று புலம்புகிறான். இந்தக் கலிகாலத்தில் கஷ்டகாலம் வரும் போதாவது கடவுளை நினைக்கிறானே! அது போதாதா? சரி! ஆபத்துக் காலத்தில் நம்மைக் காக்கும் கடவுள் யார்?
திருவோண விழாவின் நாயகனும், பிரகலாதனின் பக்திக்குள் கட்டுண்டவனும், இரணியனை வதம் செய்தவனுமாகிய ஸ்ரீ நரசிம்மரே மனிதர்களை ஆபத்துகளிலிருந்து காக்கும் கடவுள் பகவானுடைய தசாவதாரங்களில் நரசிம்ம அவதாரத்திற்குத் தனி சிறப்பு உண்டு. பரமகாருணிகனான சர்வேச்வரன் அவதரிக்கும் போதே, பக்தனுக்குத் தீங்கு விளைவிக்கத் தொடங்கிய கொடியவகை சம்கரித்து இந்த ஒரு அவதாரத்திலே தான்.
ஆகையால் பக்தர்களின் இன்னல் இடையூறுகளைக் களைத்தெறிந்து காக்க வேண்டிய நிலையில் தனக்குள்ள பாரிப்பையும் பரபரப்பையும் உலகுக்கு நன்கு வெளிப்படுத்திய அவதாரம் நரசிங்க அவதாரம். எனவே ஆபத்தும் அவசரத் தேவையுமான வேளைகளில் இரணியனை வணங்கினால் அவன் நம்மைக் காப்பது நிச்சயம்!
நரசிம்மனை மனதில் உருக நினைத்தாலே போதும். ஆபத்தை அடியோடு அழிப்பான்! சங்கடங்களை சாதுர்யமாக சமாளிப்பான். இக்கட்டான சூழ்நிலையில் இன்னல்களை இங்கிதமாய் போக்கும் வல்லமை ஸ்ரீநரசிம்மனுக்கே உள்ள சிறப்பம்சம் ஆகும்
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» ஆபத்து வந்தால் அபயம் தரும் ஸ்ரீ நரசிம்மர்
» ஆபத்து வந்தால் அபயம் தரும் ஸ்ரீ நரசிம்மர்
» ஆபத்து வந்தால், பாதுகாத்துக்கொள்வது எப்படி?
» ஸ்ரீ லட்சுமி நரசிம்மர்
» ஸ்ரீ லட்சுமி நரசிம்மர்
» ஆபத்து வந்தால் அபயம் தரும் ஸ்ரீ நரசிம்மர்
» ஆபத்து வந்தால், பாதுகாத்துக்கொள்வது எப்படி?
» ஸ்ரீ லட்சுமி நரசிம்மர்
» ஸ்ரீ லட்சுமி நரசிம்மர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum