தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நாகார்ஜுனா மகனை காதலிக்கவில்லை; நடிகை அனுஷ்கா மறுப்பு

Go down

நாகார்ஜுனா மகனை காதலிக்கவில்லை; நடிகை அனுஷ்கா மறுப்பு Empty நாகார்ஜுனா மகனை காதலிக்கவில்லை; நடிகை அனுஷ்கா மறுப்பு

Post  ishwarya Wed Apr 17, 2013 5:46 pm

“அருந்ததீ” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் அனுஷ்கா. “வேட்டைக் காரன்”, “சிங்கம்”, “வானம்” படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார்.

அனுஷ்காவும், நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவும் காதலிப்பதாக செய்தி வெளியானது. நாகசைதன்யா தெலுங்கு பட உலகில் இளம் ஹீரோவாக உள்ளார். இவருடன் பழைய நடிகை ராதா மகள் கார்த்திகா “சோஷத்” என்ற படத்தில் ஜோடியாக நடித்தார்.

அனுஷ்காவுக்கும், நாகசைதன்யாவுக்கும் ரகசியமாக திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாகவும் செய்திகள் வந்தன. இதற்கு அனுஷ்கா பதில் அளித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நானும் நாகசைதன்யாவும் காதலிக்கவில்லை. எங்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக வந்த செய்தி பொய்யானது. நாகசைதன்யாவின் தந்தை நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நான் நடித்துள்ளேன். அப்போது நாகசைதன்யா அறிமுகம் ஆனார்.

அவருக்கு என்னை விட குறைவான வயது. நான் யோகா டீச்சர் என்பதால் நாக சைதன்யா என்னிடம் வந்து யோகா கற்றுக் கொண்டார். வேறு எந்த தொடர்பும் எங்களுக்குள் இல்லை.

தற்போது படப் பிடிப்புக்காக வெளிநாடு சென்றுள்ளார். வெளி நாட்டில் இருப்பவருடன் எனக்கு எப்படி நிச்சயதார்த்தம் நடக்கும். இந்த வதந்தியை பரப்பியவர்களுக்கு என் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்று என்னை வேதனை படுத்தும் செய்திகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அனுஷ்கா கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» அனுஷ்கா, நாகார்ஜுனா வீ்டுகளில் வருமான வரித்துறை அதிரடி சோதனை!!
» என்னைப் பற்றி வதந்திகள்: தெலுங்கு நடிகர் ராணாவை காதலிக்கவில்லை – திரிஷா மறுப்பு
» லண்டன் நடிகை எமியை காதலிக்கவில்லை- ஆர்யா
» பிரேம்ஜியை நான் காதலிக்கவில்லை.. அவர்தான் அப்படி சொல்லிக் கொள்கிறார்! – நடிகை பியா
» கமலுடன் நடிக்க அனுஷ்கா மறுப்பு… புதிய ஜோடி சமீரா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum