காணக் கிடைக்காத கடிதங்கள்
Page 1 of 1
காணக் கிடைக்காத கடிதங்கள்
விலைரூ.60
ஆசிரியர் : பி.எல். முத்தையா
வெளியீடு: முல்லைப் பதிப்பகம்
பகுதி: பொது
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணாநகர் மேற்கு, சென்னை.40. (பக்கம்:160).
கடிதம் எழுதும் வழக்கமே குறைந்துவிட்ட இக்காலத்தில், கடிதம் எழுதத் தூண்டக்கூடிய நூல் இது.
"மற்றவரது கடிதம் படிப்பதில் ஒவ்வொருவருக்கும் ஆர்வம் உண்டு' என்பது உளவியல் ரீதியாக ஏற்றுக் கொள்ளக்கூடிய உண்மை. அந்த ஆவலை நிறைவேற்றும் வகையில் இந்நூல், சிலப்பதிகார மாதவியில் தொடங்கி, ரெவின்யூ போர்டுக்கு விண்ணப்பம் என முடிகிறது.
தேசபக்தர்கள், அரசியல் தலைவர்கள், தமிழறிஞர்கள், தமிழ்ப் படைப்பாளிகள், அயலக நண்பர்கள், வெளிநாட்டுப் படைப்பாளிகள் என 100 கடிதங்கள் உள்ளன.
கடிதம் எழுதப்பட்ட காலத்தின் தமிழ்நடை கவனிக்கத்தக்கது. பலமுறை படித்துப் புரிந்து கொள்ளக்கூடியதாகவும் சில உள்ளன.
ஆறுதலில் ஆண்டவனைப் பேசும் ஆறுமுகனார், எண் குறிப்புகளுடன் எழுதியுள்ள ஞானியாரடிகள்,
நட்புரிமை பாராட்டும் தனிநாயக அடிகள், பாரதிதாசனைப் பாராட்டும் சோமசுந்தர பாரதியார், தமிழார்வம் ததும்ப எழுதும் ஜி.யு.போப், தமிழ் உணர்ச்சி ஊட்டும் பாரதியார், அன்பும் அக்கறையும் கலந்து திரையுலகைக் காட்டும் எம்.ஜி.ராமச்சந்திரன் என்று பலரின் கடிதங்களை வாசகர்கள் படிக்கும் போது பண்பாட்டுப் பெருமை நிறைந்த சான்றோர்களைச் சந்திக்கும் நிறைவு ஏற்படும் என்பது உறுதி. "கடித இலக்கியம்' என ஒரு வகை உண்டு. கடிதங்களே இலக்கியமாகும் தகுதி பெறலாம் எனும் கருத்து இந்நூலால் உண்மையாகிறது.
தொகுப்பாசிரியர் தந்த அனுபவத்திற்கு நன்றி கூறலாம்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» காணக் கிடைக்காத கடிதங்கள்
» டால்ஸ்டாய் கடிதங்கள்
» கோவணாண்டி கடிதங்கள்
» கே.டானியல் கடிதங்கள்
» கடிதங்கள் கடிதங்கள்
» டால்ஸ்டாய் கடிதங்கள்
» கோவணாண்டி கடிதங்கள்
» கே.டானியல் கடிதங்கள்
» கடிதங்கள் கடிதங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum