புற்றுக்கு வளைகாப்பு
Page 1 of 1
புற்றுக்கு வளைகாப்பு
புற்றுக்கு மஞ்சள், சந்தனக் காப்பு அணிவித்து, குங்கும பொட்டு வைத்து, பால், முட்டை வார்ப்பதை பார்த்து இருப்பீர்கள். ஆனால் வளைகாப்பு நடத்தி வைப்பதை, எங்கேனும் பார்த்திருக்கிறீர்களா? நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ராசிபாளையம் மாருதி நகரில், ராஜநாகலெட்சுமி அம்மன் கோவிலில் உள்ள புற்றுக்கு வளைகாப்பு நடக்கிறது.
ராஜநாகலெட்சுமி அம்மன் குடிகொண்டிருக்கும் புற்றுக்கு, ஆடி மாதத்தில் எந்த வெள்ளிக்கிழமையில் வளைகாப்பு நடத்துது என்று குறி கேட்கப்படுகிறது. அம்மன் வாக்கு தரும் குறிப்பிட்ட ஆடி வெள்ளியில் வளைகாப்பு நடத்தப்படுகிறது.
குறிப்பிட்ட ஆடி வெள்ளிக்கிழமை அன்று சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து பெண்களும், ஆண்களும் பெருந்திரளாக வந்து கோவிலில் கூடுகின்றனர். ஐந்து சிறுமிகளுக்கு, முதலில் வளையல் அணிவிக்கப்படுகிறது. அடுத்து ராஜ நாகலெட்சுமி குடிகொண்டிருக்கும் புற்றுக்கு வளைகாப்பு நடத்தப்படுகிறது.
புற்று உள்ளே வளையல் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. அதன் பின்னர் கோவிலுக்கு வந்திருக்கும் கர்ப்பிணிப் பெண்கள் அனைவருக்கும் வளைகாப்பு நடத்தப்படுகிறது. மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு அளித்து வளையல்கள் கை நிறைய அணிவிக்கப்படுகிறது.
மற்ற பெண்களுக்கு கைவளையல்கள் அம்மன் பிரசாதமாக தரப்படுகின்றன. கடந்த 10 ஆண்டுகளாக இந்த விழா நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் இரு நூறு கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு செய்யப்படுகிறது.

gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» வளைகாப்பு உற்சவம்
» வளைகாப்பு" சடங்கும் அதன் சிறப்பும்
» சீமந்தம் வளைகாப்பு
» அம்பிகைக்கு வளைகாப்பு
» சீமந்தம் வளைகாப்பு
» வளைகாப்பு" சடங்கும் அதன் சிறப்பும்
» சீமந்தம் வளைகாப்பு
» அம்பிகைக்கு வளைகாப்பு
» சீமந்தம் வளைகாப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum