தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரசன்னா சேரன் முரண் !

Go down

பிரசன்னா சேரன் முரண் ! Empty பிரசன்னா சேரன் முரண் !

Post  ishwarya Wed Apr 17, 2013 12:16 pm

சேரன், பிரசன்னா நடிப்பில் வெளிவர இருக்கும் படம் ‘முரண்’. இப்படத்தினை நடிகர் சேரன் தயாரித்து இருக்கிறார். யு.டிவி இப்படத்தினை வெளியிட இருக்கிறது.

இப்படம் STRANGERS ON A TRAIN என்ற படத்தின் அப்பட்டமான காப்பி என்று கூறி வருகிறார்கள் தமிழ் திரையுலகில். அவர்கள் கூறியபடி படத்தின் கதை :

சேரன் ஒரு இசை கலைஞராம். சேரனின் மனைவிக்கு இசை என்றாலே சுத்தமாக பிடிக்காது. இதனால் இவர்களுக்குள் கடுமையான கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

ஒரு கட்டத்தில் தனது மனைவியின் தொல்லையால் சேரன் ஒரு இசை நிகழ்ச்சியை சரியாக செய்ய முடியாமல் போகிறது. இதனால் அனைவரும் சேரனை கிண்டல் செய்கிறார்கள்.

ஒரு பயணத்தில் பிரசன்னாவை சந்திக்க, இருவரும் நண்பர்கள் ஆகிறார்கள். பிரசன்னாவோ தனக்கு பிரச்னையாக இருப்பதே தனது தந்தை தான் என்று கூற, சேரன் தனக்கு பிரச்னையாக இருப்பதே எனது மனைவி தான் என்று கூறுகிறார்.

இருவரும் ஒரு முடிவுக்கு வருகிறார்கள். சேரனின் மனைவியை பிரசன்னா கொல்ல வேண்டும், பிரசன்னாவின் அப்பாவை சேரன் கொல்ல வேண்டும்.

சேரனின் மனைவி வேறு ஒரு விபத்தில் பலியாகிறார். இதனால் சேரன் தனது மனைவி தான் இறந்து விட்டாளே நாம் ஏன் பிரசன்னாவின் அப்பாவை கொல்ல வேண்டும் என்று முடிவு எடுக்கிறார்.

பிரசன்னாவோ ” என் அப்பாவை நீ கொல்லாவிட்டால், போலீஸிடம் நாம் பேசிய அனைத்து விஷயங்களையும் சொல்லி உன்னை மாட்டிவிடுவேன்..” என்று மிரட்டுகிறார்.

பிரசன்னாவின் அப்பாவை சேரன் கொலை செய்தாரா, இறுதியில் சேரன் என்ன ஆனார் என்பதே ’முரண்’ படத்தின் முழுக்கதை என்று கூறுகிறார்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum