தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகையின் தொல்லையால் தற்கொலைக்கு முயன்றேன்: இன்னொரு நடிகை புகாரால் பரபரப்பு

Go down

நடிகையின் தொல்லையால் தற்கொலைக்கு முயன்றேன்: இன்னொரு நடிகை புகாரால் பரபரப்பு Empty நடிகையின் தொல்லையால் தற்கொலைக்கு முயன்றேன்: இன்னொரு நடிகை புகாரால் பரபரப்பு

Post  ishwarya Wed Apr 17, 2013 12:00 pm

புரபைல் விஷன் என்ற சினிமா தயாரிப்பு நிர்வாகம் சார்பில் சுற்றுலா என்ற படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இப் படத்தில் புதுமுக கதாநாயகனாக மிதுன், புதுமுக கதாநாயகியாக ஸ்ரீஜி ஆகியோர் நடிக்கிறார்கள்.

சுற்றுலா படத்தின் படப்பிடிப்பு நீலகிரி மாவட்டத்தில் கடந்த 27 நாட்களாக நடைபெற்று வருகிறது. இப்படப்பிடிப்பு குழுவினர் ஊட்டியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி உள்ளனர். இப்படத்தில் துணை நடிகராக பிரஜன், கதாநாயகியின் தோழியாக நடிகை சாந்த்ரா ஆகியோர் நடித்து வந்தனர்.

இவர்கள் இருவரும் கணவன் -மனைவி ஆவார்கள். இவர்களும் ஊட்டியில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்தனர். நேற்று மேல் குன்னூர் அம்பேத்கர் நகர் அருகே உள்ள ஆங்கிலேயர் கல்லறை தோட்டத்தில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருந்தனர். அதன்படி படப்பிடிப்பு குழுவினர் அங்கு வந்தனர். துணை நடிகர் பிரஜன், அவரது மனைவியும் நடிகையுமான சாந்த்ரா ஆகியோரை அழைத்து வர ஊட்டியில் உள்ள ஓட்டலுக்கு படப்பிடிப்பு குழுவினர் கார் அனுப்பினார்கள்.

ஆனால் நடிகரும், நடிகையும் அங்கு இல்லை. அவர்கள் ஓட்டலை விட்டு வெளியேறி இருப்பது தெரிய வந்தது. படத்தில் நடிக்க சம்பளம் பெற்று இருந்த அவர்கள் மாயமானது படப்பிடிப்பு குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் வராததால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

இதற்கிடையில் சுற்றுலா படத்தில் நடிக்கும் மற்றொரு புது நடிகையான அங்கீதா நடிகை சாந்த்ரா மீது பரபரப்பு குற்றச்சாட்டை கூறி உள்ளார். தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:-

நடிகை சாந்த்ரா தினமும் என்னை அவதூறாக பேசிவந்தார். மன உளைச்சலுக்கு ஆளாகும் வகையில் ஒரு கட்டத்தில் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகி என் சாவுக்கு காரணம் சாந்த்ராதான் என கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலைக்கு முயன்றேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவர் எழுதிய கடிதத்தையும் காண்பித்தார். படப்பிடிப்புக்கு வந்த நடிகர், நடிகை மாயம், மற்றொரு நடிகை தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நித்யானந்தாவுடனான செக்ஸ் வீடியோ வெளியானதால் தற்கொலைக்கு முயன்றேன்! – ரஞ்சிதா
» மது பாரில் நடனம் ஆடியவர் ஹீரோயின் ஆனார் : ஓட்டல் அதிபரின் புகாரால் நடிகை ஷாக்.
»  தற்கொலை வழக்கு: நடிகை நிலா பரபரப்பு வாக்குமூலம்.!
» ஷாப்பிங் காம்ப்ளக்சில் திருடிய நடிகை! மலேசியாவில் பரபரப்பு!!
» இந்தி நடிகை சரா கானின் ஆபாச படம் வெளியானததால் பரபரப்பு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum