தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நயன்தாராவிற்காக நடிகையைத் தேடும் சிம்பு

Go down

நயன்தாராவிற்காக நடிகையைத் தேடும் சிம்பு Empty நயன்தாராவிற்காக நடிகையைத் தேடும் சிம்பு

Post  ishwarya Wed Apr 17, 2013 11:59 am

‘வல்லவன்’ படத்தில் சிம்புவும், நயன்தாராவும் இணைந்து நடித்தார்கள். பின்னர் இருவருக்கும் காதல் என்றார்கள். சில வாரங்களில் அது முறிந்து போனது. இதனை மையமாக வைத்து ‘கெட்டவன்’ என்ற பெயரில் படத்தை இயக்கி, நடிக்க ஆரம்பித்தார் சிம்பு. இதில் அவர் ஜோடியாக லேகா வாஷிங்டன் நடித்தார்.
இப்படம் சிம்பு, நயன்தாராவின் காதல் கதை என தகவல் பரவியது. நயன்தாரா வேடத்தில் நடிப்பதாக லேகா வாஷிங்கடனும் கூறியிருந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

சில நாட்களுக்குப் பிறகு லேகா வாஷிங்டனுக்கு நடிக்கத் தெரியவில்லை எனக் கூறி படத்திலிருந்து நீக்கி விட்டார் சிம்பு. சில காட்சிகளே படமான நிலையில் படத்தையே அப்போது நிறுத்திவிட்டார்.

சில ஆண்டுகள் கழித்து, மீண்டும் இப்படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார் சிம்பு. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பிரபுதேவாவுடன் திருமணத்துக்கு நயன்தாரா தயாராகி வருகிறார். இந்நிலையில் இப்படத்தை மீண்டும் தொடங்குவதாக சிம்பு அறிவித்திருப்பதால் கோடம்பாக்கத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே இப்படத்தில் கதாநாயகி நயன்தாரா கேரக்டர் என்பதால் இப்படத்தில் நடிக்க கதாநாயகிகள் தயங்குவதாக கூறப்படுகிறது. இதனால் தனக்குரிய ஜோடியை வலை வீசி தேடி வருகிறார் சிம்பு. அதுவும் நயன்தாராவுக்காக தேடி வருகிறார் சிம்பு.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum