புரட்சி தமிழன் சத்தியராஜின் தமிழீழ முழக்கம்!
Page 1 of 1

இலங்கையில் வாழ்ந்த 13 வயது புனிதவதி என்கிற தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த உண்மை கதையை வெள்ளிதிரையில் அதேவலியுடன் பதிவுசெய்து இருக்கும் படம் உச்சிதனை முகர்ந்தால்.
சத்யராஜ், சீமான், நாசர், மணிவண்ணன், சங்கீதா, புனிதவதி மற்றும் பலர் நடித்து புகழேந்தி தங்கராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தினை நார்வே வாழ் இலங்கை தமிழர்கள் தயாரித்து இருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் இசை வெளீயிட்டு விழா கடந்த ஜூலை 31-ஆம் தேதி லண்டனில் நடைபெற்றது. “ அந்த விழாவில் பேசிய புரட்சித்தமிழன் சத்தியராஜ் 194-வது நாடாக தமிழீழம் மலர்ந்தே தீரூம்” என்று முழக்கம் செய்திருக்கிறார். இதன் பிரகு நேற்று சென்னையில் நடைபெற்றது.
இசை வெளீயிட்டு விழாவின் சில தகவல் துளிகள்இதோ..!
உச்சிதனை முகர்ந்தால் படத்தில் நடிக்க புனிதவதி பாத்திரத்திற்கு பல்வேறு சிறுமிகளை தேடி இறுதியாக நீநிகா என்ற பெண்ணை ஒப்பந்தம் செய்து நடிக்க வைத்து இருக்கிறார்கள். இப்படத்தில் இவரது நடிப்பை பார்த்து இவரை புனிதவதி என்றே அழைக்கிறது படக்குழு.
முதலில் படத்தில் இடம் பெற்ற உச்சிதனை முகர்ந்தால் என்ற பாடலை பால்ராம், பேபி பிரியங்கா மேடையில் தோன்றி பாடினார்கள். இருப்பாய் தமிழா நெருப்பாய் நீ’ என்ற பாடலை பாடிய இசையமைப்பாளர் இமான் மேடையில் பாடினார். அவரை தொடர்ந்து அதே பாடலுக்கு நடனம் அமைத்த ஜோடி நம்பர் ஒன் புகழ் பிரேம் கோபால் மேடையில் தத்துரூமாக நடனமாடி அனைவரது கைதட்டலை தனக்கு உரித்தாக்கினார்.
இப்படத்தின் கதை கேட்டு முதலில் கண் கலங்கியவர் ” இந்த படத்திற்கு நான் கண்டிப்பாக இசையமைக்கிறேன். நீங்கள் உங்களால் கொடுக்க முடிந்த தொகையை கொடுங்கள் ” என்று கூறி இருக்கிறார் இமான்.
“நான் அவருக்கு கொடுத்த தொகை மிக மிக குறைவு தான். இமான் ஒரு நல்ல மனிதன்” என்று நெகிழ்ந்தார் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ். சத்யராஜ் பேசும் போது “முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேருக்கும் தூக்கு தண்டனை ரத்து செய்யக்கோரும் அனைத்து இதயங்களுக்கும் நன்றி.
அவர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இதயமே இல்லை என்று நான் கூறுவேன்.
உச்சிதனை முகர்ந்தால் படம் கண்டிப்பாக வெற்றி படமாக அமையும். புனிதவதிக்கு நேர்ந்த கொடுமையை தத்துரூபமாக படமாக்கி இருக்கிறார் புகழேந்தி தங்கராஜ். பூ விழி வாசலிலே, என் பொம்முகுட்டி அம்மாவுக்கு, ரிக்ஷா மாமா போன்ற படங்கள் நான் சின்ன குழந்தைகளுடன் நடித்த படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன. அது போலவே உச்சிதனை முகர்ந்தால் கண்டிப்பாக வெற்றி படம் தான்” என்றார்.
இப்படத்தின் கதையை கேட்ட நடிகர் நாசர் ” இப்படத்தில் எனக்கு நீங்கள் ஒரு உதவி செய்ய வேண்டும். கண்டிப்பாக எனக்கு இந்த படத்தில் நடிக்க ஒரு பைசா கூட சம்பளம் வேண்டாம்” என்று கூறி விட்டதைக் குறிப்பிட்டார்.
விழாவில் கலந்து கொண்டவர்கள் இமான் பாடுவதும், பிரேம் கோபால் நடனம் ஆடுவதும் ஒரே நேரத்தில் மேடையில் நடக்க வேண்டும் என்ற வேண்டுக்கோளுக்கு இணங்க இமான் பாட மீண்டும் நடனம் ஆடினார் பிரேம் கோபால்.
இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் ” காற்றுக்கென்ன வேலி படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை எப்படி மீறி அந்தப் படம் வெளிவந்ததோ அது போல் இப்படத்திற்கு எந்த தடை வந்தாலும் அதை எல்லாம் மீறி இந்தப் படமும் வெளிவரும். 13 வயது குழந்தையான புனிதவதிக்கு நேர்ந்த கொடுமையை திரையில் கொண்டு வர வேண்டும் என்ற எனது முயற்சிக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி.
இலங்கையில் நடைபெற்று வரும் கொடுமைகளுக்கு நாம் ஓவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது. நமது தங்கை, அம்மாவிற்கு இது போல் ஏதாவது நேர்ந்தால் நாம் சும்மா இருப்போமா. நான் இந்த சமயத்தில் ஒரு உறுதி கூறுகிறேன்.
இப்படம் வெளிவந்தவுடன் இலங்கையில் எங்கு இருந்தாலும் தேடி புனிதவதியை தமிழகத்திற்கு கூட்டி கொண்டு வருவோம். சட்டம் அதை தடுத்தாலும், அதையும் மீறி சட்ட விரோதமாக கூட அழைத்து வருவோம். புனிதவதி இங்கு வந்து நமது அனைவரிடமும் நியாயம் கேட்பாள் ” என்று இறுதியாக உணர்ச்சி உரை ஆற்றினார்.
சந்தோஷமாக ஆரம்பித்த உச்சிதனை முகர்ந்தால் இசை வெளீயிட்டு விழா இறுதியாக புகழேந்தி தங்கராஜின் இறுதி உரையில் உணர்ச்சி பிழம்பாக முடிந்தது. விரைவில் தனிக்கைக் குழுவின் பார்வைக்குச் செல்கிறது உச்சிதனை முகர்ந்தால்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வெற்றி முழக்கம்
» தெருவெங்கும் தமிழ் முழக்கம்
» வெற்றி முழக்கம் (உதயணன் கதை)
» விஜய் படத்தில் தமிழீழ ஆதரவு கருத்துக்கள்… சீமானின் விறு விறு திரைக்கதை!
» ஸ்வாமி பரத்வாஜரின் ஆன்மிக அருள் முழக்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum