முதல் பிரதி அடிப்படையா? அலறும் செல்வராகவன்
Page 1 of 1

விஸ்வரூபம் படத்தை முதலில் செல்வராகவன்தான் இயக்குவதாக இருந்தது. பின்பு அது கமலின் கைக்கு போனதை சினிமா ரசிகர்கள் அறிவர். ஆனால் செல்வாவை கழற்றிவிடாத தயாரிப்பாளர், அவருக்கு தனியாக ஒரு படத்தை இயக்கி தரும் பொறுப்பையும் ஒப்படைத்திருந்தார். முதல் பிரதி அடிப்படையில் இந்த படத்தை இயக்கி தருவதாக கூறியிருந்தாராம் செல்வாவும்.
இங்குதான் இப்போது ஒரு சின்ன கசமுசா…
பொதுவாக கை நீளம் உடையவர் செல்வராகவன். ஒரு கடலை மிட்டாய்க்கு ஆசைப்பட்டால் கூட தோட்டம் வாங்கி அதில் கடலை பறித்து மிட்டாய் செய்தால் நன்றாக இருக்குமே என்று சிந்திக்க கூடியவர். அதன் விளைவுதான் இவர் படத்திற்கு போடுகிற பட்ஜெட் ஒன்றாகவும், முடியும் போது வேறொன்றாகவும் ஆகி தயாரிப்பாளரை விரக்தியில் தள்ளிவிடுகிறது.
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கூட அடங்காத செலவு வைத்த செல்வா, தன் கையிலிருந்து சில கோடிகளை கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். இதெல்லாம் முதல் பிரதி தரும் ஜுரங்கள். எனவே விஸ்வரூபம் தயாரிப்பாளரிடம் திடீரென்று அக்ரிமென்ட்டை மாற்றுங்க. நான் முதல் பிரதி அடிப்படையில் படம் இயக்க முடியாது என்றாராம்.
தயாரிப்பாளரே தன் கையிலிருந்து பணம் கொடுக்க கொடுக்க எடுத்தால்தான் எண்ணியதை திரைக்குள் கொண்டு வர முடியும் என்பது அவரது வாதம். இதை விதண்டாவாதம் என்று தயாரிப்பாளர் எடுத்துக் கொள்ளாத வரை நிம்மதி!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» முதல் முறையாக ஹாரிஸ் ஜெயராஜுடன் கை கோர்க்கிறார் இயக்குநர் செல்வராகவன்
» அழிந்த சிங்களத் திரைப்படத்தின் பிரதி இந்தியாவில் கிடைத்துள்ளது
» அடித்தாரா நயன்தாரா? – அலறும் ஹன்சிகா
» அய்யோ கொல்ல வராங்கோ… – அலறும் மகத்
» ஐய்யய்யோ.. நான் போகலை! – அலறும் ஜெனிலியா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum