சில்க்கின் வாழ்க்கைக் கதையான டர்ட்டி பிக்சர்ஸ் ஆபாசமாக இருக்காது – வித்யா பாலன்
Page 1 of 1

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகி வரும் டர்ட்டி பிக்சர்ஸ் திரைப்படம் ஆபாசமாகவோ, அசிங்கமாகவோ இருக்காது என்று சில்க் வேடத்தில் நடித்து வரும் வித்யா பாலன் கூறியுள்ளார்.
சில்க்கின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இந்தியில் உருவாகும் படம் டர்ட்டி பிக்சர்ஸ். வித்யா பாலன்தான் சில்க் வேடத்தில் கிறங்கடிக்க வருகிறார். சமீபத்தில் இந்தப் படம் தொடர்பான ஸ்டில்கள் மற்றும் டிரெய்லர் வெளியானது. இதைப் பார்த்த பலரும் படம் ‘டபுள் ஏ’ ரகமாக இருக்குமோ என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.
ஆனால் படம் ஆபாசமாகவோ, அசிங்கமாகவோ இருக்காது என்று வித்யா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இது அசிங்கமான காட்சிகளை மட்டுமே கொண்ட படமாக நிச்சயம் இருக்காது. ஆபாசங்கள் நிறைந்த படமாகவும் இருக்காது.
நான் ஒரு நடிகையின் வேடத்தில் நடிக்கிறேன். இதை வைத்து என்னை ஆபாசப் பட நடிகையாக முத்திரை குத்துவது சரியாக இருக்காது.
சில்க் ஸ்மிதா ஒரு கவர்ச்சி நடிகை மட்டுமல்ல, மிக அழகான நடிகையும் கூட. அழகும், கவர்ச்சியும் எப்போதுமே பெரிதாக பேசப்படும். அந்த வகையில் இந்தப் படத்திலும் நான் சில்க் ஸ்மிதாவை பிரதிபலித்து நடித்துள்ளேன். எனவே அழகும், கவர்ச்சியும் இருக்கத்தான் செய்யும். அதேசமயம், சில்க் ஸ்மிதா ஒரு ஆபாசப் பட நடிகை அல்ல, அதேபோலத்தான் நானும் ஆபாசப் பட நடிகை அல்ல என்றார் வித்யா.
இப்படத்தில் நஸிருதீன் ஷா, இம்ரான் ஹஷ்மி, துஷார் கபூர் என மூன்று பேரைக் காதலிப்பது போல நடித்திருந்த அனுபவம் குறித்து கேட்டபோது, அருமையாக இருந்தது. நசீருடன் நான் ஏற்கனவே நடித்துள்ளேன். எனவே அவருடன் நடித்தபோது தயக்கம் ஏதும் இல்லை. ஆனால் இம்ரானுடன் நடித்தபோதுதான் சற்று அசவுகரியமாக இருந்தது. அதிலும் நான் அவருக்கு முத்தம் கொடுப்பது போல நடித்தபோது ரொம்பவே சங்கடப்பட்டேன் என்றார் வித்யா.
டிசம்பர் 2ம் தேதி டர்ட்டி பிக்சர்ஸ் திரையரங்கங்களுக்கு வரவுள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» டர்ட்டி பிக்சர்ஸ்’ வித்யா பாலனின் ‘ஹாட்’ படங்கள் வெளியீடு
» “தி டர்ட்டி” பிக்சர்ஸ்.. வரைமுறைகளை தாண்டி நடித்திருக்கிறேன்!
» எம்.எஸ். சுப்புலட்சுமியாக வித்யா பாலன்?
» ஹாங்காங் திரைப்பட விழாவில் 'டர்ட்டி பிக்சர்ஸ்' நாயகி!
» டர்ட்டி பிக்சர்ஸ் படம் எனக்கு வேண்டாம் நயன்தாரா!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum