தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தனுஷை நீக்கிவிட்டு ஆர்யாவுக்கு வாய்ப்பு : செல்வராகவன் அதிரடி!!

Go down

தனுஷை நீக்கிவிட்டு ஆர்யாவுக்கு வாய்ப்பு : செல்வராகவன் அதிரடி!! Empty தனுஷை நீக்கிவிட்டு ஆர்யாவுக்கு வாய்ப்பு : செல்வராகவன் அதிரடி!!

Post  ishwarya Tue Apr 16, 2013 12:27 pm

“இரண்டாம் உலகம்” படத்தில் இருந்து தனது தம்பி தனுஷை நீக்கிவிட்டு, நடிகர் ஆர்யாவுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார் டைரக்டர் செல்வராகவன். நாயகியாக கமிட் ஆன ரீச்சாவுக்கு பதிலாக நடிகை அனுஷ்கா ஒப்பந்தமாகியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. டைரக்டர் செல்வராகவனின் அடுத்த படம் “இரண்டாம் உலகம்”. இதில் தனுஷூம், ஆண்ட்ரியாவும் நடிப்பதாக இருந்தது. இந்நிலையில் தனுஷூக்கும், ஆண்ட்ரியாவுக்கும் இடையே லடாய் ஏற்பட்டு ஆண்ட்ரியா வெளியேறினார். சோனியாவை செல்வராகவன் விவாகரத்து செய்வதற்கு இந்த ஆண்ட்ரியாதான் காரணம் என்று கூறப்பட்டதால்தான் தனுஷூக்கும், ஆண்ட்ரியாவுக்கும் மோதல் உருவானதாக கூறப்பட்டது.

இந்நிலையில்தான் செல்வராகவன், தனது காதலி கீதாஞ்சலியை 2வது திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையில் ஆண்ட்ரியாவுக்கு பதிலாக நடிகை ரிச்சாவை நாயகியாக்கினார் செல்வராகவன். சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்ட நிலையில், ஹீரோ, ஹீரோயினை அதிரடியாக மாற்றியிருக்கிறார் செல்வராகவன்.

அதாகப்பட்டது, “இரண்டாம் உலகம்” படத்தில் தனுஷூக்கு பதிலாக ஆர்யாவும், ரிச்சாவுக்கு பதிலாக அனுஷ்காவும் கமிட் ஆகியிருக்கிறார்களாம். இந்த “இரண்டாம் உலகம்” படம் தெலுங்கிலும் உருவாகப்போகிறது என்பது கூடுதல் தகவல்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum