அன்னைக்கு பிடித்த செபமாலை பக்தி
Page 1 of 1
அன்னைக்கு பிடித்த செபமாலை பக்தி
திருப்பலி வழிபாட்டுக்கு அடுத்ததாக, செபமாலை பக்தியே கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இடையே அதிகமாக காணப்படுகிறது. இயேசு மற்றும் மரியன்னையோடு தொடர்புடைய மறை உண்மைகளை தியானித்து, அன்னை மரியா வழியாக கடவுளின் உதவியை வேண்டும் பக்தி முயற்சியாக செபமாலை உள்ளது.
செபமாலை என்றால், செபங்களால் தொடுக்கப்பட்ட மாலை என்று அர்த்தம். செபமாலை தியானத்தில் மகிழ்ச்சி, ஒளி, துயரம், மகிமை என்ற 4 பிரிவுகளின் கீழ் 20 மறையுண்மைகள் சிந்தனை செய்யப்படுகின்றன. இயேசுவின் பிறப்பையொட்டிய நிகழ்வுகளும், அவரது குழந்தைப் பருவமும் மகிழ்ச்சிநிறை மறையுண்மைகளிலும், இயேசுவின் பணி வாழ்வு ஒளியின் மறையுண்மைகளிலும், இயேசுவின் திருப்பாடுகள் துயர்நிறை மறையுண்மைகளிலும், இயேசுவின் உயிர்ப்பு, விண்ணேற்றம், மரியாவின் விண்ணக மாட்சி உள்ளிட்டவை மகிமைநிறை மறையுண்மைகளிலும் தியானிக்கப்படுகின்றன.
செபமாலை பக்தியின் ஒரு பகுதி தியானம் என்றால், மற்றொரு பகுதி செபம். இதில் நான்கு செபங்கள் செபிக்கப்படுகின்றன. அவை,
1. பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே எனத் தொடங்கும் இயேசு கற்றுக்கொடுத்த செபம்,
2. அருள் நிறைந்த மரியே வாழ்க என்று தொடங்கும் மங்கள வார்த்தை செபம்,
3. தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவிக்கும் மகிமை உண்டாவதாக எனத் தொடங்கும் மூவொரு கடவுள் புகழ்,
4. ஓ என் இயேசுவே! எங்கள் பாவங்களை மன்னியும் என்று தொடங்கும் மரியன்னை கற்றுக்கொடுத்த செபம் ஆகியவை.
செபமாலையில் 53 சிறிய மணிகளும், 6 பெரிய மணிகளும், இயேசுவின் உருவத்துடன் கூடிய ஒரு சிலுவையும் உள்ளன. செபமாலையில் உள்ள திருச்சிலுவையில் விசுவாச அறிக்கை சொல்லப்படுகிறது.
தனித்திருக்கும் பெரிய மணியில் இயேசு கற்றுக்கொடுத்த செபத்தை ஒரு முறையும், பின்னர் வரிசையாக உள்ள சிறிய மணிகளில் மங்கள வார்த்தை செபத்தை ஒவ்வொரு தடவையும், இறுதியாக தனித்த மணியில் மூவொரு கடவுள் புகழ், மரியன்னை கற்றுக் கொடுத்த செபம் ஆகியவற்றை அடுத்தடுத்து சொல்ல வேண்டும்.
பின்னர் அந்த மணியிலிருந்தே மீண்டும் இதே முறையில் செபிக்க வேண்டும். செபமாலை என்பது அன்னை மரியாவுக்கு மிகவும் பிடித்த பக்தி முயற்சியாகும். செபமாலை செபிப்பவர்கள் நரக நெருப்பில் விழமாட்டார்கள் என்பது அன்னையின் வாக்குறுதி.
மேலும், மண்ணக வாழ்வுக்கும், விண்ணக வாழ்வுக்கும் தேவையான உதவிகளைப் பெற செபமாலை உதவுகிறது. கிறிஸ்தவர்கள் செபித்த தொடர் செபமாலையால், 1571ஆம் ஆண்டு துருக்கியருக்கு எதிரான லெப்பன்டோ கடற்போரில் கிறிஸ்தவர்கள் வெற்றி பெற்றதாக வரலாறு கூறுகிறது. அதன் நினைவாகவே அக்டோபர் 7ந்தேதி செபமாலை அன்னை விழா கொண்டாடப்படுகிறது.
இரண்டாம் உலகப் போர் முடிவில் 1945 ஆகஸ்ட் 6ந்தேதி, ஜப்பானின் ஹிரோசிமா நகரில் அமெரிக்கா அணுகுண்டு வீசியது. அதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஆனால் அந்நகரின் மையப் பகுதியில், அணுகுண்டு வீசப்பட்ட இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்த விண்ணேற்பு அன்னை ஆலயமும், அதனோடு இணைந்திருந்த இயேசு சபை இல்லமும் மட்டும் கதிர்வீச்சு தாக்குதலில் இருந்து தப்பின.
அந்த இல்லத்தில் இருந்த இயேசு சபை குருக்கள் 8 பேரும் சிறிய காயம் கூட இல்லாமல் உயிர் தப்பினர். அந்த நேரத்தில் செபமாலை செபித்து கொண்டிருந்ததே தாங்கள் பிழைத்ததற்கு காரணமென அவர்கள் சான்று கூறியது செபமாலையின் வல்லமையை நமக்கு உணர்த்துகிறது.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» அன்னைக்கு பிடித்த செபமாலை பக்தி
» அன்னைக்கு பிடித்த செபமாலை பக்தி
» அருள்மிகு அன்னைக்கு ஆயிரம் போற்றிகள்
» பண ஆசை பிடித்த பெண்கள் கதை
» துர்க்கைக்கு பிடித்த மலர் எது?
» அன்னைக்கு பிடித்த செபமாலை பக்தி
» அருள்மிகு அன்னைக்கு ஆயிரம் போற்றிகள்
» பண ஆசை பிடித்த பெண்கள் கதை
» துர்க்கைக்கு பிடித்த மலர் எது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum