தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இயேசுவின் தாய் மரியாவின் வரலாறு

Go down

இயேசுவின் தாய் மரியாவின் வரலாறு Empty இயேசுவின் தாய் மரியாவின் வரலாறு

Post  birundha Sat Apr 13, 2013 8:40 pm


இயேசுவின் தாய் மரியாவின் வாழ்க்கை நிகழ்வுகள் பைபிளில் சுருக்கமாகவே காணப்படுகின்றன. என்றாலும், முதல் மூன்று நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட கிறிஸ்தவ நூல்கள் வழியாக அவரது வரலாற்றை நாம் முழுமையாக அறிந்து கொள்ள முடிகிறது.

தொடக்க கால கிறிஸ்தவர்களான இயேசுவின் சீடர்கள், அன்னை மரியாவின் பாதுகாப்பிலேயே திருச்சபையை வளர்த்ததாக பைபிளும் பழங்கால கிறிஸ்தவ ஏடுகளும் சான்று பகர்கின்றன. உலக மீட்பராம் இயேசுவை இந்த உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த அன்னை மரியாவின் வரலாற்றை நாம் இங்கே காணலாம்.

தற்போதைய இஸ்ரேல் நாட்டின் எருசலேம் நகரில் வாழ்ந்த செல்வந்தர் யோவாக்கிம் - அன்னா தம்பதியர் குழந்தைப்பேறு இல்லாமல் முதுமை அடைந்தனர். இறைவன் தமது வானதூதர் வழியாக மரியாவின் பிறப்பை அவர்களுக்கு அறிவித்தார்.

அதனால் மனம் மகிழ்ந்த இருவரும் பிறக்கப் போகும் குழந்தையை எருசலேம் ஆலயத்தில் அர்ப்பணிப்பதாக நேர்ந்து கொண்டனர். பத்தாம் மாதத்தில் அன்னா தனது குழந்தையைப் பெற்றெடுத்தார். வானதூதர் அறிவித்தபடியே அக்குழந்தைக்கு `மரியா' என்று பெயரிட்டனர். அதற்கு `கடலின் நட்சத்திரம்' அல்லது `விடிவெள்ளி' என்று அர்த்தம்.

மரியா யோசேப்பின் மனைவி:

மரியாவுக்கு மூன்று வயது ஆனபோது, அவரது பெற்றோர்கள் மரியாவை எருசலேம் ஆலயத்தில் அர்ப்பணித்தனர். மரியா ஆலய கல்வி சாலையில் எபிரேய எழுத்துகளை எழுதவும் வாசிக்கவும் கற்றுக்கொண்டார். விவிலியத்தின் பழைய ஏற்பாட்டு நூல்களை படித்து, அதில் இருந்த மெசியா பற்றிய இறைவாக்குகளின் பொருளை கேட்டுத் தெரிந்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருந்தார்.

மறைநூல்களின் வார்த்தைகளை வாசித்து அவற்றை மனதில் இருத்தி சிந்திப்பதில் மரியா ஆர்வம் கொண்டிருந்தார் பாடல்களைப் பாடுவதிலும், செபிப்பதிலும் சிறந்து விளங்கினார். ஆலயத்திற்கு தேவையான திரைச் சீலைகளை நெய்வதிலும் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தார். மரியாவுக்கு பதினான்கு வயதானபோது, அவருக்கு திருமணம் செய்துவைக்க ஏற்பாடுகள் நடைபெற்றன.

எருசலேமில் இருந்த தாவீதுகுல இளைஞர்கள் அனைவரும் சுயம்வரத்திற்கு அழைக்கப்பட்டனர். அவர்களில் தச்சுத் தொழிலாளரான யோசேப்பு வைத்திருந்த கைத்தடியில் இறைவனின் செயலால் லீலி மலர் பூத்தது. எனவே, யோசேப்பு மரியாவின் கணவராகத் தேர்ந்தெடுக்ëகப்பட்டார். மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் நடைபெற்றது.

இருவருக்கும் திருமணம் நடைபெறுவதற்கு முன்பு, வானதூதர் கபிரியேல் இயேசுவின் பிறப்பை மரியாவுக்கு அறிவித்தார். இதனால் தூய ஆவியாம் கடவுளின் வல்லமையால் மரியா தன் வயிற்றில் இயேசுவைக் கருத்தாங்கினார். அதே வேளையில் அவரது உறவினரான எலிசபெத்தும் கர்ப்பிணியாக இருந்ததை அறிந்து, அவருக்கு உதவி செய்ய யூதேயாவுக்கு புறப்பட்டு சென்றார்.

மரியா இயேசுவின் அன்னை:

மரியா அங்கிருந்து திரும்பிய பிறகு, மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமணம் நடந்தது. கடவுளின் வல்லமையால் மரியா கருவுற்றிருப்பதை வானதூதர் மூலம் அறிந்துகொண்ட யோசேப்பு, தனது வாழ்நாள் முழுவதும் மரியாவுக்கு பாதுகாவலராகவே இருந்தார். அவர்கள் இருவரும் பெத்லகேம் சென்றிருந்த வேளையில் இயேசு பிறந்தார்.

நாற்பதாம் நாளில் அவர்கள் இயேசுவை எருசலேம் ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தனர். அப்போது அங்கு வந்திருந்த இறைவாக்கினர் சிமியோன் மரியா அனுபவிக்கப்போகும் துயரங்களை முன்னறிவித்தார். பின்பு மரியாவும் யோசேப்பும் குழந்தை இயேசுவுடன் நாசரேத் திரும்பினர்.

இயேசுவுக்கு பன்னிரண்டு வயது ஆனபோது, மரியாவும் யோசேப்பும் இயேசுவைக் கூட்டிக் கொண்டு பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர். அப்போது இருவருக்கும் தெரியாமல் இயேசு கோவிலிலேயே தங்கிவிட்டார். மரியாவும் யோசேப்பும் மூன்று நாட்கள் தேடிய பிறகே அவரைக் கண்டுபிடித்தனர். அ

வர்களோடு வீடு திரும்பிய இயேசு பெற்றோருக்கு பணிந்து நடந்தார். இயேசு யோசேப்புக்கும், மரியாவுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வந்தார். இந்த திருக்குடும்பத்தின் தலைவியான மரியா இயேசுவுக்கும், யோசேப்புக்கும் பணிவிடை செய்து வந்தார். மரியா

கிறிஸ்தவர்களின் தாய்:

மரியாவுக்கு நல்ல பாதுகாவலராகவும், இயேசுவுக்கு சிறந்த வளர்ப்பு தந்தையாகவும் இருந்த யோசேப்பு தனது முதுமையில் இயேசுவும் மரியாவும் அருகில் இருக்க பாக்கியமான மரணம் அடைந்தார். அதன்பின் சிறிது காலம் தச்சுத்தொழில் செய்து வந்த இயேசு, 30ஆம் வயதில் யோவானிடம் திருமுழுக்கு பெற்று தனது இறையரசு பணியைத் தொடங்கினார்.

இயேசுவின் பணிவாழ்வில் மரியாவும் அவரைப் பின்தொடர்ந்தார். இயேசு கிறிஸ்து செய்த முதல் புதுமையே மரியாவின் பரிந்துரையால்தான் நடைபெற்றது. இயேசுவின் பெண் சீடர்களுள் ஒருவராக மரியாவும் இருந்தார். இயேசுவின் சிலுவைப் பாடுகளிலும் மரியா பங்கேற்றார். சிலுவையின் அடியில் வியாகுலத் தாயாக நின்ற மரியாவை இயேசு தனது சீடர்கள் (கிறிஸ்தவர்கள்) அனைவருக்கும் தாயாகத் தந்தார்.

இயேசுவின் உயிர்ப்பு, விண்ணேற்றம் ஆகியவற்றுக்கு பிறகு இயேசுவின் சீடர்கள் அனைவரும் மரியாவின் வழிகாட்டுதலின்படியே வாழ்ந்து வந்தனர். இயேசுவின் சீடர்கள் பல்வேறு நாடுகளுக்கு நற்செய்தி அறிவிக்க சென்றபின், சீடர்களில் ஒருவரான யோவானின் பாதுகாப்பில் மரியா வாழ்ந்து வந்தார்.

விண்ணேற்பு அடைந்த அரசி:

மரியாவின் மரண காலம் நெருங்கி வந்ததும், இயேசுவின் சீடர்கள் அனைவரும் உள்ளுணர்வால் தூண்டப்பட்டு வெளி நாடுகளில் இருந்து எருசலேம் நோக்கி விரைந்தனர். தோமா (தோமையார்) தவிர மற்ற சீடர்கள் அனைவருக்கும் ஆசி வழங்கிய நிலையில் மரியா மரணம் அடைந்தார். யூத வழக்கப்படி மரியாவின் உடலை சீடர்கள் விரைவிலேயே அடக்கம் செய்துவிட்டனர்.

தாமதமாக எருசலேம் வந்து சேர்ந்த தோமா, மரியாவிடம் இறுதி ஆசீர் பெற முடியாமல் போனது குறித்து மனம் வருந்தினார். எனவே அவரது முகத்தையாவது ஒருமுறை பார்க்க வேண்டுமென்று விரும்பினார். மரியாவை அடக்கம் செய்த இடத்துக்கு சென்ற சீடர்கள் கல்லறையைத் திறந்தனர். ஆனால் அங்கே மரியாவின் உடல் இல்லை. மாறாக நறுமணம் வீசும் மலர்கள் இருந்தன.

இறைமகன் இயேசு தனது அன்னை மரியாவின் உடலை அழிவுற விடாமல், உடலோடும் ஆன்மாவோடும் அவரை விண்ணகத்தில் ஏற்றுக்கொண்டார் என்பதை சீடர்கள் உணர்ந்துகொண்டனர்.

இதை உறுதி செய்யும் வகையில் மரியன்னை தோமாவுக்கு காட்சி அளித்து, தான் விண்ணக மாட்சியில் இருப்பதை உறுதிசெய்ததுடன், தனது இடைக்கச்சையையும் அவருக்கு பரிசளித்தார். தோமா அற்புதங்கள் செய்ய பயன்படுத்திய, அந்த இடைக்கச்சை இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அன்னையின் அருளாட்சி தொடர்கிறது.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum