கத்திரிக்காய் காராமணிக் குழம்பு
Page 1 of 1
கத்திரிக்காய் காராமணிக் குழம்பு
கத்திரிக்காய்
தேங்காய்
கத்திரிக்காய்
தேவையானப் பொருட்கள்:
- கத்திரிக்காய் – 2
- காராமணிப்பயறு – 1 கப்
- தேங்காய்த்துருவல் – 1/2 கப்
- புளி – எலுமிச்சம் பழ அளவு
- சாம்பார் பொடி – 1 டேபிள்ஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
- கசகசா – 1 டீஸ்பூன்
- சீரகம் – 1/2 டீஸ்பூன்
- நல்லெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
- கடுகு – 1/2 டீஸ்பூன்
- சாம்பார் வெங்காயம் – 10
- கறிவேப்பிலை – சிறிது
- உப்பு – 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:
- ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் காராமணியை சிவக்க
வறுத்து, குக்கரில் போட்டு அத்துடன் 2 கப் தண்ணீர் சேர்த்து, 2 அல்லது 3
விசில் வரும் வரை வேகவிட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும். - உப்பு, புளி இரண்டையும் ஒரு கப் தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து, பிழிந்து, புளித்தண்ணீரைத் தனியாக எடுக்கவும்.
- வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, அதில் கசகசா, சீரகம்,
தேங்காய்த்துருவல் ஆகியவற்றைப் போட்டு வாசனை வரும் வரை வறுத்தெடுத்து,
சற்று ஆறியபின், விழுதாக அரைத்தெடுக்கவும். - கத்திரிக்காயை நடுத்தர அளவு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் புளித்தண்ணீரை ஊற்றி அதில் கத்திரிக்காய்
துண்டுகள், வேக வைத்த காராமணி, சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து மேலும்
2 கப் நீரையும் சேர்த்துக் கலக்கி அடுப்பிலேற்றிக் கொதிக்க விடவும்.
குழம்பு கொதித்து, காய் வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய்
விழுதை போட்டுக் கிளறவும். மிதமான தீயில் வைத்து மீண்டும் ஒரு 5 நிமிடம்
கொதிக்க விட்டு, அதில் கடுகு, வெங்காயம், கறிவேப்பிலைத் தாளித்துக் கொட்டி
இறக்கி வைக்கவும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கத்திரிக்காய் காராமணிக் குழம்பு
» கத்திரிக்காய் காராமணிக் குழம்பு
» எண்ணைக் கத்திரிக்காய் குழம்பு
» எண்ணைக் கத்திரிக்காய் குழம்பு
» கத்திரிக்காய் மசாலா குழம்பு
» கத்திரிக்காய் காராமணிக் குழம்பு
» எண்ணைக் கத்திரிக்காய் குழம்பு
» எண்ணைக் கத்திரிக்காய் குழம்பு
» கத்திரிக்காய் மசாலா குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum