மாங்காய், முருங்கைக்காய், பலாக்கொட்டை குழம்பு
Page 1 of 1
மாங்காய், முருங்கைக்காய், பலாக்கொட்டை குழம்பு
தேவையானப்பொருட்கள்:
தாளிப்பதற்கு:
செய்முறை:
- மாங்காய் – 1 (நடுத்தர அளவு)
- முருங்கைக்காய் – 1
- பலாக்கொட்டை – 5 முதல் 6 வரை
- தக்காளி – 1
- துவரம் பருப்பு – 1 கப்
- புளி – சிறு எலுமிச்சம் பழ அளவு
- சாம்பார் பொடி – 1 டேபிள்ஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
- உப்பு – 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
தாளிப்பதற்கு:
- நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
- கடுகு – 1/2 டீஸ்பூன்
- பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
- கறிவேப்பிலை – சிறிது
- சாம்பார் வெங்காயம் – 4 அல்லது 5 (நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்)
- பச்சை மிளகாய் – 2 (நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்)
செய்முறை:
- துவரம் பருப்பை கழுவி, 2 கப் தண்ணீர் சேர்த்து, ஒரு சிட்டிகை மஞ்சள் தூளைப்போட்டு, குக்கரில் வைத்து குழைய வேக விட்டு எடுக்கவும்.
- புளியை ஒரு கப் தண்ணீரில் ஊறவைத்து, கரைத்து, வடிகட்டிக் கொள்ளவும்.
- தக்காளியை பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- பலாகொட்டையை குறுக்கே இரண்டாக வெட்டி, அதன் மேலுள்ள வெள்ளைத் தோலை
நீக்கி, 2 கப் நீரில் போட்டு வேக விட்டு, தனியாக எடுத்து வைக்கவும். - முருங்கைக்காயை 2 அல்லது 3 அங்குல நீளத்திற்கு வெட்டிக் கொள்ளவும்.
மாங்காயை கொட்டையுடன் நான்கு அல்லது 5 துண்டுகளாக விட்டிக் கொள்ளவும். - ஒரு பாத்திரத்தில் முருங்கைக்காய் துண்டுகள், வேக வைத்த பலாகொட்டை,
தக்காளி, சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டு, காய்
மூழ்கும் அளவிற்கு தண்ணீரைச் சேர்த்து 5 அல்லது 6 நிமிடங்கள் வேக விடவும்.
பின்னை அதில் மாங்காய் துண்டுகளை சேர்த்து மாங்காய் வேகும் வரை மிதமான
தீயில் வைக்கவும். மாங்காய் சீக்கிரம் வெந்துவிடுமாகையால், முருங்கைக்காய்
சற்று வெந்ததும்தான் மாங்காயைச் சேர்க்க வேண்டும். மாங்காயை முதலிலேயே
சேர்த்தால், மாங்காய் வெந்து கரைந்து விடும். - காய்கள் வெந்தவுடன், புளித்தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் அதில் வெந்தப் பருப்பை கடைந்து சேர்க்கவும்.
- ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு, அது வெடிக்க
ஆரம்பித்ததும், பெருங்காயத்தூள், வெட்டி வைத்துள்ள வெங்காயம், பச்சை
மிளகாய், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கி, கொதிக்கும் சாம்பாரில் கொட்டி,
இறக்கி வைக்கவும்
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மாங்காய், முருங்கைக்காய், பலாக்கொட்டை குழம்பு
» மாங்காய், முருங்கைக்காய், பலாக்கொட்டை குழம்பு
» பலாக்கொட்டை பொடிமாஸ்
» பலாக்கொட்டை பொடிமாஸ்
» பலாக்கொட்டை ஃபிரை
» மாங்காய், முருங்கைக்காய், பலாக்கொட்டை குழம்பு
» பலாக்கொட்டை பொடிமாஸ்
» பலாக்கொட்டை பொடிமாஸ்
» பலாக்கொட்டை ஃபிரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum