பொரிச்ச குழம்பு
Page 1 of 1
பொரிச்ச குழம்பு
கத்திரிக்காய்
அவரைக்காய்
கத்திரிக்காய்
தேவையானப்பொருட்கள்:
- காய்கறி
நறுக்கியது – 2 கப் (வெள்ளைக்கத்திரிக்காய், பெங்களூர் கத்திரிக்காய்,
அவரைக்காய், குடமிளகாய் அல்லது விருப்பமான எந்தக் காயையும் சேர்க்கலாம்) - பயத்தம் பருப்பு – 1/2 கப்
- சாம்பார் பொடி – 1 டீஸ்பூன் (குவித்து அளக்கவும்)
- மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
- உப்பு – 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
அரைத்தெடுக்க:
- தேங்காய்த்துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
- சீரகம் – 1/2 டீஸ்பூன்
- பச்சை மிளகாய் – 1
- அரிசி மாவு – 1 டீஸ்பூன்
தாளிக்க:
- நல்லெண்ணெய் – 1 டீஸ்பூன்
- கடுகு – 1/2 டீஸ்பூன்
- சாம்பார் வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
- கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
- பயத்தம் பருப்பை சிறிது மஞ்சள் தூள் சேர்த்து மலர வேக வைத்துக் கொள்ளவும். குழைய விடவேண்டாம்.
- காய்கறித்துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் சாம்பார் பொடி,
மஞ்சள் தூள், உப்பு போட்டு, காய் மூழ்கும் அளவிற்கு த்ண்ணீரை சேர்த்து வேக
விடவும். காய் வெந்தவுடன் வேக வைத்துள்ள பருப்பைச் சேர்த்து கொதிக்க
விடவும். - தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், அரிசி மாவு ஆகியவற்றை
அரைத்தெடுத்து, அத்துடன் அரைத்த மிக்ஸியைக் கழுவி அந்த நீரையும் சேர்த்து,
கொதிக்கும் குழம்பில் விட்டுக் கிளறவும். மீண்டும் ஒரு கொதி வரும் வரை
அடுப்பில் வைத்திருந்து பின்னர் அதில் கடுகு, வெங்காயம், கறிவேப்பிலைத்
தாளித்துக் கொட்டவும். - சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். தொட்டுக்கொள்ள பொரித்த அப்பளம் அல்லது வடவம் நன்றாக இருக்கும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பொரிச்ச குழம்பு
» பொரிச்ச குழம்பு
» பீர்க்கங்காய் பொரிச்ச குழம்பு
» பீர்க்கங்காய் பொரிச்ச குழம்பு
» பீர்க்கங்காய் பொரிச்ச குழம்பு
» பொரிச்ச குழம்பு
» பீர்க்கங்காய் பொரிச்ச குழம்பு
» பீர்க்கங்காய் பொரிச்ச குழம்பு
» பீர்க்கங்காய் பொரிச்ச குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum