கத்திரிக்காய் ரஜ்மா கறி
Page 1 of 1
கத்திரிக்காய் ரஜ்மா கறி
தக்காளி
கத்திரிக்காய்
வெங்காயம்
தேவையானப்பொருட்கள்:
- ரஜ்மா – 1/2 கப்
- கத்திரிக்காய் – 2 முதல் 3 வரை
- பெரிய வெங்காயம் – 1
- சாம்பார் பொடி.
- தக்காளி – 1
- மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
- நல்லெண்ணெய்- ஒரு டேபிள்ஸ்பூன்
- கடுகு – 1/2 டீஸ்பூன்
- சீரகம் – 1/2 டீஸ்பூன்
- கறிவேப்பிலை – சிறிது
- உப்பு – 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:
- ரஜ்மாவை இரவே ஊறவைக்கவும் அல்லது குறைந்தது 8 மணி நேரம் ஊறவிடவும்.
- ஊறிய ரஜ்மாவை குக்கரில் 2 அல்லது 3 விசில் வரும் வரை வேகவைத்து எடுத்து நீரை வடிகட்டி விடவும்.
- கத்திரிக்காயை நீளவாக்கில் வெட்டி நீரில் போட்டு வைக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.
- ஒரு வாணலியில் எண்ணை விட்டு, சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடிக்க
ஆரம்பித்ததும் சீரகம் சேர்த்து சற்று வறுத்து அத்துடன் வெங்காயம்,
கறிவேப்பிலைச் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் தக்காளியையும் சேர்த்து
வதக்கி அதில் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு போட்டுக் கிளறி விடவும்.
தக்காளி நன்றாக மசிந்தவுடன் அதில் கத்திரிக்காய் துண்டுகளையும், வேக வைத்த
ரஜ்மாவையும் சேர்த்து, சிறிது தண்ணீரைச் சேர்த்துக் கிளறி மூடி வைக்கவும்,
அடுப்பை சிறு தீயில் வைத்து கத்திரிக்காய் வெந்து, தண்ணீரும் சுண்டியவுடன்,
இறக்கி வைக்கவும். - சாதம், சப்பாத்தி, ரொட்டி ஆகியவ்ற்றுடன் தொட்டுக் கொள்ள சுவையாயிருக்கும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கத்திரிக்காய் ரஜ்மா கறி
» கத்திரிக்காய் ரஜ்மா கறி
» கத்திரிக்காய்
» கத்திரிக்காய் சாதம்
» கத்திரிக்காய் புலாவ்
» கத்திரிக்காய் ரஜ்மா கறி
» கத்திரிக்காய்
» கத்திரிக்காய் சாதம்
» கத்திரிக்காய் புலாவ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum