பப்பாளிப்பழ அல்வா
Page 1 of 1
பப்பாளிப்பழ அல்வா
தேவையானப்பொருட்கள்:
செய்முறை:
- பப்பாளிப்பழம் (சிறு துண்டுகளாக வெட்டியது) – 2 கப்
- சர்க்கரை – 1/2 கப்
- பால் – 1 கப்
- அரிசி மாவு – 1 டேபிள்ஸ்பூன்
- நெய – 3 முதல் 4 டேபிள்ஸ்பூன் வரை
- ஏலக்காய்த்தூள் – 1/4 டீஸ்பூன்
- முந்திரிப்பருப்பு – 10
செய்முறை:
- ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு முந்திரிப்பருப்பை
வறுத்தெடுக்கவும். அதே வாணலியில் அரிசி மாவைப் போட்டு இலேசாக வறுத்தெடுத்து
வைத்துக் கொள்ளவும். - பாலைக் காய்ச்சி ஆறவிடவும். ஆறிய பாலில் வறுத்தெடுத்த அரிசி மாவைச்
சேர்த்துக் கலக்கிக் கொள்ளவும். (அரிசி மாவு அல்வாவைக் கெட்டிப் படுத்த
உதவும்). - மிக்ஸியில் பப்பாளிப் பழத்துண்டுகளைப் போட்டு நன்றாக அரைத்தெடுக்கவும்.
- அரைத்த விழுதை ஒரு அடி கனமான வாணலியில் போட்டு 7 அல்லது 10 நிமிடங்கள் வரை கை விடாமல் கிளறவும்.
- பின்னர் அதில் சர்க்கரையைக் கொட்டிக் கிளறவும். தித்திப்பு போதுமா
எனறுப் பார்த்து, தேவையானால் மேலும் சிறிது சர்க்கரைச் சேர்க்கவும். - சர்க்கரையும் பப்பாளி விழுதும் நன்றாகச் சேரும் வரை கிளறிக் கொண்டிருக்கவும்.
- பின்னர் அதில் பாலை விட்டு 5 முதல் 10 நிமிடங்கள் வரைக் கிளறவும்.
- அதன் பின் ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் நெய்யை விட்டுக் கிளறவும்.
- அடுப்பை மிதமான தீயில் வைத்து, அவ்வப்பொழுது சிறிது நெய்யை விட்டு, அல்வா சுருண்டு வரும் வரை கிளறி விடவும்.
- கடைசியில், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரிப்பருப்புச் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும்.
- கீழே இறக்கி, ஒரு நெய் தடவியக் கிண்ணத்திலோ, தட்டிலோ மாற்றி வைக்கவும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum