புளி உப்புமா
Page 1 of 1
புளி உப்புமா
தேவையானப்பொருட்கள்:
தாளிக்க:
செய்முறை:
- அரிசி மாவு – 1 கப்
- புளி – ஒரு பெரிய நெல்லிக்காயளவு
- மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
- பெருங்காய்த்தூள் – ஒரு சிட்டிகை
- உப்பு – 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
தாளிக்க:
- நல்லெண்ணெய் – 2 முதல் 3 டேபிள்ஸ்பூன் வரை
- கடுகு – 1/2 டீஸ்பூன்
- கடலைப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் – 2 முதல் 3 வரை
- கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
- புளியை தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து சாற்றை பிழிந்தெடுக்கவும்.
அத்துடன் தேவையான நீரைச் சேர்த்து 2 கப் அளவிற்கு புளித்தண்ணீரை எடுத்துக்
கொள்ளவும். - ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, புளித்தண்ணீர், மஞ்சள் தூள்,
பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றை ஒன்றாகப் போட்டு கரைத்துக் கொள்ளவும்.
உப்பு சரி பார்க்கவும். கரைத்த மாவு இட்லி மாவு பதத்திற்கு இருக்க
வேண்டும். - ஒரு வாணலியை அடுப்பிலேற்றி, அதில் எண்ணையை ஊற்றி சூடானதும் கடுகு
போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு
ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுக்கவும். பின்னர் மிளகாயைக் கிள்ளிப்
போடவும், கறிவேப்பிலையைச் சேர்த்து வதக்கி, அதில் கரைத்து வைத்துள்ள மாவை
ஊற்றி, கை விடாமல் கிளறவும். மாவு பாத்திரத்தில் ஒட்டாமல் பந்து போல்
உருண்டு வரும் பொழுது இறக்கி வைக்கவும். - இதை அப்படியே சாப்பிடலாம். விருப்பப்பட்டால், தேங்காய்த்துவையலுடனும்
சேர்த்து பரிமாறலாம். மேற்கண்ட அளவிற்கு 2 அல்லது 3 பேர் சாப்பிடலாம். - இது எளிதாக செய்யக்கூடிய புளி உப்புமா. இதை அரிசி ரவா அல்லது பாம்பே ரவா உபயோகித்தும் செய்யலாம்.
- இதையே புளித்தண்ணீருக்குப் பதில், 2 கப் புளித்த மோரில், அரிசி மாவைக்
கரைத்து செய்தால் “மோர் களி” அல்லது “மோர் கூழ்” ஆகும். சாதரண
மிளகாய்க்குப் பதில் மோர் மிளகாய் சேர்க்க வேண்டும். மஞ்சள் தூளைத்
தவிர்த்து விட வேண்டும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum