கத்தரிக்காய் கூட்டு
Page 1 of 1
கத்தரிக்காய் கூட்டு
தேவையானப்பொருட்கள்:
செய்முறை:
- பிஞ்சு கத்தரிக்காய் – 1/4 கிலோ
- சர்க்கரைவள்ளிகிழங்கு – 1
- துவரம் பருப்பு – 1 ஆழாக்கு/கப்
- கடலை பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்
- தனியா – 2 ஸ்பூன்
- துறுவிய தேங்காய் – சிறிதளவு
- மிளகாய் வற்றல் – 4 (காய்ந்த மிளகாய்)
- பெருங்காயம் – 1 சிட்டிகை
- வெல்லம் – சிறிது
- புளி – எலுமிச்சை அளவு
- மஞ்சள் பொடி – 1/2 ஸ்பூன்
- உப்பு – 1.5 ஸ்பூன்
செய்முறை:
- கத்தரிக்காய்களை நீளவாக்கில் நறுக்கி தண்ணீரில் போடவும் (தண்ணீரில் போடாவிட்டால் கருத்துவிடும்).
- சர்க்கரைவள்ளிகிழங்கை சதுர வடிவுத் துண்டுகளாக்கவும்.
- புளியை 2 டம்ளர் தண்ணீர் விட்டு கரைக்கவும்.
- துவரம் பருப்பை சிறிது மஞ்சள் தூள் போட்டு வேகவைக்கவும்.
- கரைத்த புளி நீரில் சர்க்கரைவள்ளிகிழங்கு, கத்தரிக்காய்கள், உப்பு, மஞ்சள்தூள் போட்டு கொதிக்கவைக்கவும்.
- காய்கள் வெந்தபின் வேகவைத்த பருப்பை போடவும்
- கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், தனியா, பெருங்காயம் –
இவற்றை எண்ணை விட்டு இளஞ்சிவப்பாக வறுத்து, துறுவிய தேங்காயையும் சேர்த்து
நீர்விட்டு கெட்டியாக அரைக்கவும். - பருப்பு போட்டு கூட்டு கொதிக்கும் போது அரைத்த விழுதையும் போடவும்.
- பிறகு 1/2 ஸ்பூன் அரிசிமாவை நீரில் கரைத்து கொதிக்கும் கூட்டில் விடவும்.
- கொதித்தவுடன் சிறிது வெல்லம் சேர்த்து இறக்கவும்
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கத்தரிக்காய் கூட்டு
» கத்தரிக்காய் பருப்புக் கூட்டு
» கத்தரிக்காய் பருப்புக் கூட்டு
» கத்தரிக்காய்
» கத்தரிக்காய் பருப்புக் கூட்டு
» கத்தரிக்காய் பருப்புக் கூட்டு
» கத்தரிக்காய் பருப்புக் கூட்டு
» கத்தரிக்காய்
» கத்தரிக்காய் பருப்புக் கூட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum