அகத்திக்கீரை பருப்பு
Page 1 of 1
அகத்திக்கீரை பருப்பு
தேவையான பொருட்கள்:
அகத்திக்கீரை – ஒரு கட்டு
சின்ன வெங்காயம் – 8
துவரம்பருப்பு – அரை கப்
காய்ந்த மிளகாய் – 6
தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்
பூண்டு – 2 பல் (அல்லது) மிளகு, சீரகம் தலா ஒரு டீஸ்பூன். (பூண்டு வாசம் பிடிக்காதவர்கள் மிளகு, சீரகம் சேர்க்கலாம்).
செய்முறை:
துவரம்பருப்பை, ரொம்ப மசிந்துவிடாமல் வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். அகத்திக்கீரையை ஆய்ந்து, சுத்தம் செய்துகொள்ளவும். அதில் பாதியை பருப்போடு சேர்க்கவும். மீதிக் கீரையில் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து இரண்டு நிமிடம் வேகவிட்டு, அடுப்பை அணைத்துவிடவும். பிறகு, பருப்பு + கீரை கலவையை அடுப்பில் வைத்து, உப்பு சேர்த்து வேகவிடவும்.
காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், பூண்டு (அல்லது) மிளகு, சீரகம் சேர்த்து விழுதாக அரைக்கவும். அரைவேக்காடாக எடுத்து வைத்திருக்கும் அகத்திக் கீரையையும் போட்டு ஒரு சுற்றுச் சுற்றி எடுக்கவும். இந்தக் கலவையை, பருப்பு + கீரையுடன் போட்டு, வெங்காயத்தையும் வதக்கி அதோடு சேர்த்து இறக்கவும்.
இதையே இன்னொரு விதமாகவும் செய்யலாம். சிறிது எண்ணெயில் காய்ந்த மிளகாய், பூண்டு (அல்லது) மிளகு சீரகம் தாளித்து, தேங்காய் துருவலை சிவக்க வறுத்து, அரைவேக்காடாக எடுத்துவைத்த கீரையையும் சேர்த்து ஒரு புரட்டுப் புரட்டிவிடவும். இதை அப்படியே பருப்பும் கீரையும் கொதித்து சேர்ந்தாற்போல வரும்போது அதோடு சேர்த்துக் கிளறி இறக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அகத்திக்கீரை பருப்பு
» அகத்திக்கீரை பருப்பு
» அகத்திக்கீரை துவட்டல்
» அகத்திக்கீரை துவட்டல்
» அதிசயமான அகத்திக்கீரை:
» அகத்திக்கீரை பருப்பு
» அகத்திக்கீரை துவட்டல்
» அகத்திக்கீரை துவட்டல்
» அதிசயமான அகத்திக்கீரை:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum